சத்தமே இல்லாமல் வெளியான பிக்பாஸ் சீசன் 7 டீசர்..! நியூ லுக்கில் தெறிக்கவிட்ட நடிகர் கமல்!!

பொதுவாக மக்கள் தொலைக்காட்சிகளை பொழுதுபோக்கிற்காக பார்த்து வந்தனர். இதில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களுக்கு பெண்கள் அடிமை என்றே சொல்லலாம். இதில், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சேனல்கள் பிடிக்கும். குழந்தைகள் என்றால் பொம்மை போன்று காட்சியளிக்கும் சேனல்களை பார்ப்பார்கள் அதுவே, இளைஞர்கள் என்றால் ஸ்போர்ட்ஸ் போன்ற சேனல்களை பார்பார்கள். மேலும், பெண்கள் மற்றும் பெரியவர்கள் சீரியல்களை பார்ப்பார்கள்.

இந்நிலையில், தற்பொழுது ஒவ்வொரு சேனல்களும் மற்றொரு சேனல்களுக்கு போட்டியாகயும் பயனாளர்களை கவரும் வகையிலும் புதிய புதிய கேம்ஸ் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை நடத்தி வருகிறது. அந்த வகையில், பெரும்பாலான மக்கள் விரும்பு பார்க்கும் ஒரு சேனலாக தற்பொழுது விஜய் டி.வி உள்ளது. இந்த தனியார் சேனலில் மக்களை கவர்ந்து இழுக்க அவ்வபோது புதுப்புது ஷோக்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

அதன்படி, விஜய் டிவியில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக பிக்பாஸ் இருக்கிறது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. அடுத்ததாக பிக்பாஸ் சீசன் 7 எப்பொழுது தொடங்கப்படும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், தற்பொழுது அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 7 குறித்த டீசர் வெளியாகியுள்ளது. இந்த சீசனிலும் நடிகர் கமல்ஹாசன் தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கயுள்ளார்.


LATEST POSTS IN VALAIYITHAL.COM