Oxygen Facial:
இயற்கையாகவே பெண்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் முகபொலிவுடன் இருப்பது மிகவும் பிடித்தமான ஒன்று. இதற்கு பலவழிகள் இருந்தாலும், முதலில் பெரும்பாலும் தேர்வு செய்வது ஃபேஷியல் தான். சிலர் இயற்கை பொருட்களை பயன்படுத்தி, வீட்டிலேயே ஃபேஷியல் செய்து கொள்வார்கள். சிலர் வழக்கமாக அழகு நிலையங்களுக்கு(Beauty parlour) செல்வார்கள். இன்னும் சிலர், கடைகளில் உள்ள பியூட்டி கிரீம்களை பயன்படுத்தி ஃபேஷியல் செய்வார்கள்.
ஃபேஷியல் செய்வதால், சருமத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, இயற்கையாகவே சருமம் கூடுதல் நிறத்துடன் மினுமினுக்கவும் செய்யும். முகத்தில் உள்ள பருக்கள் உட்பட அனைத்துவித எண்ணெய் பிசுபிசுப்பையும் நீக்கி, எப்போதும் முகப்பொலிவுடன் பளிச்சென்று வைப்பதற்கு ஃபேஷியல் உதவுவதால், இதனை மாதம் ஒரு முறை அல்லது இரண்டு முறையாவது செய்து விடுவார்கள்.
இது சருமத்துளைகளை சுத்தம் செய்து, தோலில் பயன்படுத்தும் க்ரிம்கல் மற்றும் தயாரிப்புகளின் ஆழமான ஊடுருவலுக்கு ஃபேஷியல் உதவுகிறது. இதனால், சருமம் எப்போதும் பொலிவாக இருக்கும். ஒவ்வொரு முறையும் ஃபேஷியல் செய்யும் போது முகத்திலுள்ள இறந்த செல்கள் வெளியேற்றப்படுவதால், முகப்பருக்கள் இன்றி மாசு மருவற்ற சருமம் கிடைக்க செய்கிறது.
இயற்கையான முறையில் ஆரோக்கியமாகவும், சருமத்தை எப்போதும் இளமைத்தோற்றத்துடனும் வைத்துக்கொள்வது மிகவும் முக்கியம். ஆக்சிஜன் ஃபேஷியல் நமது முகத்திற்கு எந்த வகையில் உதவுகிறது என்பதை இங்கு படித்து, தெரிந்து கொள்ளலாம்.
ஆக்ஸிஜன் ஃபேஷியலின் நன்மைகள்:

பொதுவாகவே ஃபேஷியல்களில் முகப்பரு குறைப்பு ஃபேஷியல், ஃபாராப்பின் ஃபேஷியல், ஆக்சிஜன் ஃபேஷியல், பழ பேஷியல், வைன் ஃபேஷியல், வயது எதிர்ப்பு ஃபேஷியல், அரோமாதெரபி ஃபேஷியல், தங்க ஃபேஷியல், கொலாஜன் ஃபேஷியல், வைர ஃபேஷியல் போன்ற பல்வேறு வகைகள் உள்ளன. இதில் ஆக்சிஜன் ஃபேஷியல் செய்வதால், ஏற்படக் கூடிய நன்மைகளை தற்போது பார்க்கலாம்.
- சருமத்தை பிரகாசமாக மாற்றி, தோலின் PH மதிப்பை கட்டுக்குள் வைக்கிறது. சருமத்தில் உள்ள எளிதில் இறந்த செல்களை அகற்ற உதவுகிறது. மறுமுறை நாம் ஃபேஷியல் செய்யும் வரை, அதே பொலிவு நீடிக்கவும் செய்கிறது.
- முகத்தில் எண்ணெய்ப் பசை இருந்தாலே, சில நாட்களில் அந்த இடத்தில் மாறாத தழும்புகளுடன் பருக்கள் அதிகரித்திடக் கூடும். இதனை சரி செய்ய, ஆக்ஸிஜன் ஃபேஷியல் உதவுகிறது. இது முகப்பருக்களை கட்டுபடுத்துவதுடன், அதிகப்படியான எண்ணெய்ப் பசையையும் குறைக்கிறது.
- இயற்கை முறையில் எப்போதும் இளமை தோற்றத்தில் சருமத்தை வைத்து கொள்ளவும், மினுமினுக்கவும் ஆக்சிஜன் ஃபேஷியல் உதவுகிறது. இது சருமத்தில் “கொலாஜன்” உற்பத்தியை சீராக்குகிறது.
- இதனால், வயதான அறிகுறிகள் வராமல் தடுத்து, சருமம் எப்போதும் இளமை தோற்றமுடன் இருக்க உதவுகிறது. மேலும், இயன்ற அளவிற்கு சுருக்கங்களை தள்ளி போட இது உதவுகிறது.
- முகத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து சுருக்கங்கள் விழாமல் பாதுகாக்க, ஆக்ஸிஜன் ஃபேஷியல் உதவுகிறது. உடனடி முக பொலிவிற்கு இதை பயன்படுத்தலாம். மேலும், முகம் சிவந்து இருத்தல், வீக்கம், எரிச்சல் போன்றவற்றையும் குணப்படுத்துகிறது.
- பொதுவாகவே வெயிலில் செல்லும் போது, சூரியனிடமிருந்து புற ஊதாக் கதிர்களால் சருமம் கருமையடையும். இப்படி கருமை அடையாமல், சருமத்தை பாதுகாத்து கொள்ள ஆக்சிஜன் ஃபேஷியல் நமக்கு உதவுகிறது.
ஆக்ஸிஜன் ஃபேஷியல் முக பொலிவை பராமரிக்க மிகவும் உறுதுணையாக இருக்கும் என்கின்றனர் அழகுக்கலை நிபுணர்கள். இது போன்ற பலவகையான நன்மைகளை “ஆக்சிஜன் ஃபேஷியல்” தருவதால், மக்கள் அதிகம் விரும்பி பயன்படுத்தும் ஃபேஷியல்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடதக்கதாகும்.