BEL நிறுவனத்தில் வேலை வாய்ப்பிற்கான அறிவிப்பு வந்திருக்கு! உடனே டைரக்ட் இண்டர்வியூ அட்டன் பண்ண ரெடி ஆகுங்க…!

பாரத் எலக்ட்ரானிக் லிமிடெட்(BEL) நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களுக்கான அறிய வாய்ப்பு. BEL நிறுவனம் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில் அப்ரண்டிஸ் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. மொத்தம் 81 இடங்கள் மொத்தம் காலியாக உள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

ALSO READ : ஒன்லி வாக்-இன் இன்டர்வியூ…! அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

  • பாரத் எலக்ட்ரானிக் லிமிடெட் நிறுவனத்தின் ஆட்சேர்ப்புக்கான கல்வித்தகுதியானது Diploma, B.Com, Graduate ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Apprentice பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு, தெலுங்கான ஆகிய மாநிலங்களில் பணியில் சேர்க்கப்படுவார்கள்.
  • மத்திய அரசின் BEL நிறுவனத்தில் Graduate Apprentice வேலையில் 63 பணியிடமும், Technician(Diploma) Apprentice வேலையில் 10 பணியிடமும், B.Com Apprentice பணியில் 8 பணியிடமும் காலியாக உள்ளது.
  • பாரத் எலக்ட்ரானிக் லிமிடெட் நிறுவனத்தின் வயது வரம்பானது 01/01/2024 தேதியின்படி அதிகபட்ச வயது 25 ஆக இருக்க வேண்டும்.
  • இந்த பதவிக்கு General/OBC/SC/ST/PWD/Ex-Serviceman போன்ற அனைத்து பிரிவினரும் விண்ணப்பிக்க விண்ணப்பக்கட்டணம் செலுத்த தேவையில்லை.
  • BEL நிறுவனத்தின் Graduate Apprentice பணிக்கு மாத சம்பளமாக ரூ.17,500/- , Technician(Diploma) Apprentice பணிக்கு மாத சம்பளமாக ரூ.12,500/-, B.Com Apprentice பணிக்கு மாத சம்பளமாக ரூ.10,500/- வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
  • இந்த அறிவிப்புக்கு பாரத் எலக்ட்ரானிக் லிமிடெட் நேரடியாக வாக்கின்கள் மூலம் மட்டுமே விண்ணப்பதாரர்களை ஆட்சேர்ப்பு செய்கிறது.

எனவே விருப்பம் உள்ளவர்கள் வேலைக்கான விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து கீழே தரப்பட்டுள்ள முகவரிக்கு நேரடியாக இன்டர்வியூக்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நேர்காணல் நடைபெறும் இடம் :

Bharat Electronics Limited,
Nandambakkam,
Chennai – 600089.

நேர்காணல் நடைபெறும் தேதி மற்றும் நேரம் : 10/01/2024 at 10.00AM

மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள வேண்டுமென்றால் Bharat Electronics Limited Recruitment 2024 Notification என்ற லிங்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top