குற்றால அருவியில் குளிக்க தடை..! சபரிமலை செல்லும் பக்தர்கள் வேதனை

0
39

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை , ஆகஸ்ட் மாதங்களில் சீசன் காலமாகும். இந்த காலகட்டத்தில் பிரதான அருவியான குற்றாலம் மெயின் அருவி , ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் ஆர்ப்பரித்து வரும் தண்ணீரில் ஆனந்தமாய் குளிப்பதற்கு பல பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள்.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த மழையால் பிரதான அருவியான குற்றாலம் மெயின் அருவியில் பாதுகாப்பு வளவை தாண்டி தண்ணீர் கொட்டுகிறது. ஆர்ப்பரித்து வரும் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு நலன்கருதி அருவியில் குளிக்க தடை விதித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாகவே குற்றாலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வானம் மெகமூட்டத்துடனும் பனிமூட்டத்துடனும் தான் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று மாலை 5 மணிக்கு மேல் கனமழை பெய்ய ஆரம்பித்தது. இந்த கனமழை சுமார் 20 நிமிடம் பெய்தது. இதன் காரணமாக அருவியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குளிக்க தடை விதிக்கபப்ட்டுள்ளதால் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

RECENT POSTS-ன் வலையிதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here