10 வருடங்களுக்கு பின் தமிழ் படத்தில் அடியெடுத்து வைக்கிறார் பருத்திவீரன் பிரியாமணி…!

0
52

டைரக்டர் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்ட நடிகைகளில் பிரியாமணியும் ஒருவர். பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த படத்தின் மூலம் பிரியாமணிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது . ‘மலைக்கோட்டை’, ‘தோட்டா’, ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘ராவணன்’ போன்ற பல படங்களில் நடித்தார். தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார்.

Priyamani 1

நடிகை பிரியாமணி கடைசியாக தமிழில் ‘சாருலதா’ என்ற படத்தில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். அதன்பிறகு தமிழ் படங்களில் நடிகை பிரியாமணி இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்பொழுது தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக இருக்கிறார். 10 வருடங்களாக தமிழ் படங்களில் நடிக்காத நடிகை பிரியாமணி தற்பொழுது ‘டிஆர் 56’ என்ற படத்தில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.

Priyamani 2

இந்த ‘டிஆர் 56’ படத்தினை ராஜேஷ் அனந்தலீலா இயக்கியுள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க த்ரில்லர் கலந்ததாகவும் சஸ்பென்ஸ் நிறைந்ததாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Priyamani 3

இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ட்ரைலரில் உயிர் பிழைக்க ஒவ்வொரு 56 நிமிடங்களுக்கும் ஒரு அரிய மாத்திரையை எடுத்துக் கொள்ள வேண்டிய ஒரு வித்தியாசமான கொலையாளியை ஒரு சிபிஐ எவ்வாறு கண்டறிகிறார், என்னென்ன இன்னல்களை சந்திக்கிறார் என்பதை திகிலுடன் இந்த ‘டிஆர்56’ படம் கூறுகிறது. இந்த படத்தில் நடிகை பிரியாமணி சிபிஐ அதிகாரியாக நடித்துள்ளார்.

Priyamani 4

RECENT POSTS-ன் வலையிதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here