மீண்டும் இணைந்த அசத்தலான காம்போ! பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு…!

Today Latest Cinema News 2023

இயக்குனர் பி.வி.தரணிதரன் இயக்கத்தில் சத்யராஜ் மற்றும் சிபிராஜ் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான ‘ஜாக்சன் துரை’ என்ற ஹாரர் காமெடி நடித்தனர். அதில் பிந்து மாதவி, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ரசிகர்களிடையே நல்ல வவேர்ப்பையும் பெற்றது.

தற்போது, இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கி வருகிறது. இப்படத்தில் சத்யராஜ் மற்றும் சிபிராஜூடன் சம்யுக்கதா, மனிஷா ஐயர், சரத் ரவி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார். கல்யாணம் வெங்கட்ராமன் ஒளிப்பதிவு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் பிரிட்டிஷ் அதிகாரி போல் காட்சியளிக்கிறார். இவருக்கு பின்னாடி சிபிராஜ் குதிரையில் வருவது போல போஸ்டரில் உள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


LATEST POSTS IN VALAIYITHAL.COM