அட்ராசக்க! மலேசியாவில் வாரி குவிக்கும் வசூல்! அசைக்க முடியாத அளவுக்கு சாதனை படைத்த ஜெயிலர்…!

Today Cinema News 2023

Today Cinema News 2023

கடந்த ஆகஸ்ட் மாதம் 10 -ஆம் தேதி, இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜின்காந்த், மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உட்பட பல பிரபல நடிகர்கள் நடித்திருந்தனர்.

தயாரிப்பாளர் கலாநிதி மாறன் விமர்சன ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற ‘ஜெயலர்’ திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் நோக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு கார் மற்றும் காசோலைகளை வழங்கினார். அதுமட்டுமில்லாமல், இத்திரைப்படத்தில் பணியாற்றிய 300 பேருக்கு தங்க நாணயங்களை வழங்கியும் மகிழ்ந்தார்.

இதனை தொடர்ந்து, மலேசியாவில் ‘ஜங்கரன்’ நிறுவனத்தால் வெளியிடப்பட்ட இத்திரைப்படம் வசூல் சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலேசியாவில் இதுவரை வெளியான அனைத்து இந்திய திரைப்படங்களின் வசூல்களையும் இத்திரைப்படம் முறியடித்து வரலாற்று சாதனையைப் படைத்துள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. இந்த தகவலை ‘ஜங்கரன்’ நிறுவனம், தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதனை கண்டு மகிழ்ந்த ரசிகர்கள், தங்களின் சமூக வலைதளங்களில் இந்த தகவலை பகிர்ந்து ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.