அச்சு அசலா நாய் போலவே உடை அணிந்து நாயாகவே வாழும் மனிதர்…! வைரலாகும் வீடியோ…!

Today World News 2023

நாம் வீட்டில் செல்லப்பிராணியாக பூனை, நாய், பறவைகள் என வளர்ப்போம். அதை நம் நம் குடும்பத்தில் ஒருவரை போல பராமரித்து அன்போடு பழகுவோம். அதே போல செல்லப்பிராணியும் நம்மில் அன்பாக பழகும். இந்நிலையில், கடந்த ஒரு வருட காலமாக நாயை போல உடை அணித்து நாயை போலவே வாழும் மனிதாரை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

டோகோ என்ற டிவிட்டர் பெயரை கொண்ட ஜப்பான் நாட்டு மனிதர் சில மாதங்களாகவே நாயாகவே வாழ்ந்து வருகிறார். கடந்த ஆண்டு, டோகோ சுமார் ரூ.12 லட்சத்தை செலவு செய்து ஒரு நாயின் உடையை வாங்கியுள்ளார். திரைப்படங்களுக்கு ஆடைகளை தயாரிக்கும் ஜப்பானிய நாட்டு நிறுவனமான Zeppet என்ற நிறுவனம், Toco என்ற அந்த நபருக்காக புசு புசு நாய் போல உடையை வடிவமைத்துள்ளது. இந்த ஆடையை தயாரிக்க சுமார் 40 நாட்கள் ஆனதாம். மேலும் அவர் தான் நாயாக வாழும் வாழ்க்கை குறித்து தனது ட்விட்டர் பக்கத்திலும் தனது யூடியூப் சேனலிலும் பதிவிட்டு வருகிறார். ஆனாலும் அவர் தன் முகத்தை காட்ட விரும்பவில்லை.

தற்போது வீடியோவில் டோகோ நாய் உடையில் வெளியே செல்வதை காண முடிகிறது. மேலும், அவர் சாலையில் உள்ள உண்மையான நாய்களுடன் சேர்ந்து விளையாடுகிறார். டோகோ இப்படி செய்வதால் . கிண்டல் செய்வார்கள் என தன் முகத்தை காட்டமாட்டார் என தெரிவித்தனர். சிறு வயதிலிருந்து அவர் நாயாக வாழவேண்டும் என்பதே அவரது கனவு என ஒரு பேட்டி ஒன்றில் கூறினார். மக்களுடன் நாயை போல கொஞ்சி விளையாடும் டோகோவுக்கு வேற லெவலில் ஆதரவு கிடைத்துள்ளது.


LATEST POSTS IN VALAIYITHAL.COM