ஆவின் பால் விலையை தமிழக அரசு குறைத்ததால், 17 வகையான இனிப்பு பொருட்களின் விலையை உயர்த்திய ஆவின் நிறுவனம்!

0
117

இனிப்பு பொருட்களான மைசூர்பா, பால்கோவா, குலோப் ஜாமுன் போன்ற 17 வகையான இனிப்புகளை ஆவின் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நிலையில், 17 வகையான இனிப்பு பொருட்களின் விலையை ஆவின் நிறுவனம் உயர்த்தியுள்ளது.

நாளுக்கு நாள் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டே செல்வதால், சாமானிய மக்கள் குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆவின் பால் பொருட்களின் விலை ஏற்றம், கடந்த 6 மாதங்களில் இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆவினில் பால் விலையை குறைத்த நிலையில், பாலில் தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம், பாதாம் பால் பவுடர், நெய், தயிர் போன்ற பால் பொருட்களின் விலையை உயர்த்தி ஆவின் நிறுவனம் மக்களை கவலையடைய செய்துள்ளது.

GST கவுன்சில் கூட்டம்: 5 சதவீதம் GST வரி உயர்வு

GST கவுன்சில் கூட்டம், கடந்த ஜுலை மாதம் நடைபெற்றது. இதில் 5 சதவீத GST வரியானது லஸ்ஸி, மோர், தயிர் போன்ற பால் பொருட்களுக்கு விதிக்கப்பட்டது. இதனை அடுத்து, பால் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. இதுமட்டுமல்லாமல், ரூ.4 முதல் ரூ.10 ஆக, தனியார் நிறுவனங்களும் மோர், லஸ்ஸி, தயிர் உள்ளிட்ட பொருட்களின் விலையை உயர்த்தியது.

ஆவின்: நெய் மற்றும் தயிர் விலை உயர்வு

GST வரி உயர்த்தியதன் காரணமாக, ஆவின் பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. ஆவினில், ஒரு லிட்டர் நெய்யின் விலையானது ரூ.535 இலிருந்து ரூ.580 ஆகவும், அரை லிட்டர் தயிரின் விலையானது ரூ.30 இலிருந்து ரூ.35 ஆகவும், 100 கிராம் தயிரின் விலையானது, ரூ.10 இலிருந்து ரூ.12 ஆகவும் ஆவின் நிறுவனம் உயர்த்தி உள்ளது.

ஆவின்: இனிப்பு பொருட்களின் விலை உயர்வு

ஆவின் நிறுவனத்தினால் பாலில் இருந்து தயாரிக்கப்படும் இனிப்பு பொருட்களின் விலையானது உயர்த்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, இன்று முதல் ஆவின் பால் பொருட்களின் விலை உயர்வு அமலுக்கு வருவதாக அந்நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் குலோப் ஜாமுன், ரசகுல்லா போன்ற 17 வகையான இனிப்பு பொருட்களின் விலையை ரூ.20 முதல் ரூ.80 வரையிலும், அந்நிறுவனம் உயர்த்தி உள்ளது.

விலை உயர்வு பற்றிய விவரம்:

  • பால்கோவா: 100 கிராம் – ரூ.47 இலிருந்து ரூ.55-க்கு விலை உயர்வு
  • மைசூர்பா: அரை கிலோ – தற்போது ரூ.230 இருந்து ரூ.270-க்கு விலை உயர்வு
  • இனிப்பில்லாத கோவா: ஒரு கிலோ – ரூ.520 இலிருந்து ரூ.600-க்கு விலை உயர்வு
  • குலோப் ஜாமுன்: 125 கிராம் – தற்போது ரூ.45 இலிருந்து ரூ.50-க்கு விலை உயர்வு

இன்று முதல், இந்த விலை உயர்வானது அமலுக்கு வந்து உள்ளது. தமிழக அரசு ஆவின் பால் விலையை குறைத்ததை அடுத்து, ஆவின் நிறுவனம் பால் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு, சாமானிய மக்களின் வாழ்க்கையை சற்று கலங்க வைத்துள்ளது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here