வேற லெவல் லுக்கில் என்ட்ரி கொடுக்கும் ஆர்யா! படக்குழு வெளியிட்ட புகைப்படம்…!

Latest Cinema News Today

Latest Cinema News Today

நான் கடவுள், மதராச பட்டினம், அவன் இவன், இரண்டாம் உலகம், மகாமுனி, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட பல படங்களில் தனது திறமையை வெளிப்படுத்திய ஆர்யா தற்போது நிஹாரிகா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் ‘சைந்தவ்’ என்ற படத்தில் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த கதாப்பாத்திரத்தின் பெயர் ‘மனாஸ்’ என்று இயக்குனர் சைலேஷ் கொலானு தெரிவித்துள்ளார்.

நீண்ட தலைமுடியும் கையில் துப்பாக்கியும் வைத்துக்கொண்டு ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கும் ஆரியாவின் புகைப்படத்தை படக்குழுவினர் வெளியிட்டது. தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. விக்டரி வெங்கடேஷ்-ன் 75-வது திரைப்படமான சைந்தவ் மிக பிரமாண்டமாக உருவாக உள்ளது. இத்திரைப்படதிற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார்.

Also Read >> ஜெயிலர் படத்தின் அபார வெற்றி… நடிகர் ரஜினிக்கு இப்படியொரு பரிசளித்த கலாநிதி மாறன்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் போன்ற பல மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக சைந்தவ் உருவாகி வருகிறது. இதில் வெங்கடேஷ், நவாசுதீன் சித்திக், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆண்ட்ரியா, சாரா, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படமானது கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு வருகின்ற டிசம்பர் 22-ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.