சைவ, அசைவ பிரியர்களா நீங்கள்? அப்போ இந்த செய்தி நிச்சயம் உங்களுத்தான்!! உடனே படிங்க…

உலகம் முழுவதும் பருவ நிலை மாற்றம் காரணமாக மழை பொழிய வேண்டிய நேரத்தில் வெயிலும் வெளியில் அடிக்கும் நேரத்தில் மலையும் பெய்து வருகிறது. இதனால் அந்தந்த பருவங்களில் விளையும் அரிசி, பருப்பு, காய்கறிகள் போன்ற பல்வேறு வகையான அத்தியாவசிய பொருட்களின் விளைச்சல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் கடந்த சில மாதங்களாகவே விலைவாசி அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக காய்கறிகளின் விலை உச்சத்தை தொட்டு வருகிறது.

இதுகுறித்து கிரிஸில் சந்தை ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் அசைவ உணவின் விலையானது 11 சதவீதம் என்ற அளவுக்கு உயர்ந்து இருப்பதாகவும், சைவ உணவின் விலை சுமார் 28 சதவீதம் அதிகரித்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த மாதம் தக்காளி, வெங்காயம் மட்டுமல்லாமல் இஞ்சி, பச்சை மிளகாய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளின் விலையும் பலமடங்கு உயர்ந்துள்ளது. காய்கறிகளின் இந்த விலை ஏற்றம் காரணமாகத்தான் சைவ உணவின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. ஆனால், அசைவ உணவு வகையில் எந்தவொரு விலை ஏற்றமும் இல்லாததால் அசைவ உணவு விலையில் சதவீதம் சற்று குறைந்தே காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


LATEST POSTS IN VALAIYITHAL.COM