மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ் அப் செயலி உலகம் முழுவதும் உள்ள கோடிகணக்கான மக்களால் பயன்படித்தப்படும் ஒரு செயலியாக உள்ளது. வாட்ஸ் அப் செயலி மூலம் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு குறுஞ்செய்தி, ஆடியோ, வீடியோ போன்றவற்றை எளிய முறையில் அனுப்பிக் கொள்ள முடிகிறது. இந்த அம்சம் மட்டுமல்லாமல் வாட்ஸ் அப் மூலம் வீடியோ கால், ஆடியோ கால் போன்ற பல்வேறு வசதிகளும் இருப்பதால் வாட்ஸ் அப் பயனாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.

இந்நிலையில், வாட்ஸ் அப் நிறுவனம் தனது பயனாளர்களை ஈர்க்கும் வகையில் அவ்வபோது புதுப்புது அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. எந்த அளவிற்கு வாட்ஸ் அப் பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதோ அதே அளவிற்கு வாட்ஸ் மூலம் ஏற்படும் மோசடிகளும் அதிகரித்து வருவதாக நிறுவனம் எச்சரித்து உள்ளது.
Also Read : திடீரென பொதுமக்களின் வங்கி கணக்கில் போடப்பட்ட ரூ.1 லட்சம்..! மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த பொதுமக்கள்!!
இதையடுத்து, இதுபோன்ற மோசடிகளில் இருந்து தங்களது பயனார்களை காக்கும் வகையில் தற்பொழுது வாட்ஸ் அப் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முதலில் பயனாளர்களின் மொபைல் எண்ணிற்கு வெளிநாடுகளில் இருந்து அழைப்பு வரும். இந்த அழைப்பை எடுக்கவில்லை என்றால் வாட்ஸ் அப்பில் செய்திகளை அனுப்புகிறார்களாம். இதனால் +1 (404) மற்றும் +1 (773) போன்ற தொலைபேசி எண்களில் இருந்து தொடங்கும் அழைப்புகள், செய்திகள் வந்தால் எடுக்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.