மொபைல் போன் அதிகமா யூஸ் பண்ணிட்டு இருக்கவங்களா நீங்க..? அப்ப கண்டிப்பா இந்த செய்திய படிங்க…

முன்னதாக தெருக்களுக்கு ஒரு போன் பூத் இருக்கும். ஏதாவது அவசர நிலை ஏற்பட்டால் வேண்டியவருக்கு அழைப்பை விடுக்க அந்த போன் பூத்துக்கு சென்று போன் செய்து வருவார்கள். அதிலும் எவ்வளவு நேரம் போனில் பேசுகிறோமோ அந்த அளவிற்கு காசு கொடுக்க வேண்டும். ஆனால், தற்பொழுது அந்த நிலை முற்றிலும் மாறியுள்ளது என்றுதான் சொல்லணும். ஏனென்றால், ஒவ்வொருவர் கைகளிலும் காசு இருக்கோ இல்லையோ ஆனால் மொபைல் போன் உள்ளது. அந்த அளவிற்கு, காலம் மாறி வருகிறது.

இன்றைய காலகட்டத்தில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மொபைல் போனை பயன்படுத்தி வருகின்றனர். முன்பெல்லாம் குழந்தைகள் கிரிக்கெட், நொண்டி போன்று பல்வேறு விளையாட்டுகளை விளையாடி வந்தனர். ஆனால், மொபைலில் உள்ள விளையாட்டை விளையாடி வருகின்றனர். இந்தியர்கள் ஒரு நாளைக்கு மட்டும் சுமார் 3.15 மணி நேரம் சமூக வலைப்பக்கங்களை பயன்படுத்துவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 89 சதவீத இந்தியர்கள் தினமும் சமூக வலைப்பக்கங்களை பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் மொபைல் தொழில்நுட்ப வசதிகள் பெருகி வரும் நிலையில் மொபைல் ஃபோன்களை பயன்படுத்தும் நேரமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்னும் அடுத்தடுத்த ஆண்டுகளில் மொபைல் போன்களின் உபயோகம் அதிகரிக்கும் எனவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


LATEST POSTS IN VALAIYITHAL.COM