உங்க ஊர்லையும் ஆவின் பாலை அதிக விலைக்கு விக்குறாங்களா? அப்போ இனி கவலைப்பட தேவையில்லை…

Are you selling your village milk at a higher price Then you dont need to worry anymore see here

தமிழகத்தில் பால் கொள்முதல் செய்யும் அரசின் பொதுத்துறை நிறுவனமாக ஆவின் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பாலை கொள்முதல் செய்து அதனை சில்லறை மற்றும் மொத்த விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. ஆனால், கடந்த சில மாதங்களாகவே தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பால் தட்டுப்பாடு ஏற்ப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்கவும் பால் கொள்முதலை அதிகரிக்கவும் தற்பொழுது நவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில், ஆவின் பால் கொள்முதல் விலையை பொறுத்தவரையில் அனைத்து பருவத்திலும் ஒரே சீரான விலையை வழங்கி வருவதாகவும் பால் விநியோகஸ்தர்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையைத் தாண்டி விற்பனை செய்யக்கூடாது என்றும் தெரிவித்தார்.

மேலும், தனியார் பால் உற்பத்தி நிருவனமிடம் பால் விவசாயிகளுக்குப் பாதுகாப்பானது அல்ல என்பதும் ஆவின் பாலை அதிக விலைக்கு விற்பனை செய்தால் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


LATEST POSTS IN VALAIYITHAL.COM