தமிழ்நாடு அரசில் ஆபீஸ் அசிஸ்டண்ட் வேலை! குறிப்பிட்ட தேதிக்குள் சீக்கிரமா அப்ளை பண்ணிடுங்க..!

0
19
are you searching for govt jobs Office Assistant Job in Tamilnadu Govt Apply soon before the specified date for CUTN Recruitment 2023 Notification

CUTN Recruitment 2023 Notification OUT

பல்கலைக்கழகத்தில் வேலை தேடுறீங்களா? திருவாரூரில் உள்ள தமிழக மத்திய பல்கலைக்கழகத்தில் புதிய வேலை ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காலியாக இருக்குற Office Assistant (அலுவலக உதவியாளர்) பணிக்கென 1 காலி பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசாங்க வேலையில் பணியாற்ற விரும்பும் விண்ணப்பதாரர்கள் மே மாதத்தில் 11ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை இந்த பதவிக்கு ஆன்லைன் அதாவது உங்க ஈமெயில் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். உங்களுடைய விண்ணப்பங்களை கடைசி தேதிக்குள் அனுப்பாமல் தாமதமாக அனுப்பினால், அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதந்தோறும் ரூ.12,000 அரசு சம்பளத்தை வாங்கிடலாம். மேலும் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பத்தாரர்கள் தமிழகத்திலே உள்ள திருவாரூர் மாவட்டத்தில் வேலை செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்படும். இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க… மேலும் விவரங்களை அறிய தொடர்ந்து படிங்க…

CUTN Recruitment 2023 | apply online (by e-mail) | Latest TN govt jobs 2023

நிறுவனத்தின் பெயர்தமிழக மத்திய பல்கலைக்கழகம்
Central University of Tamil Nadu (CUTN)
அதிகாரப்பூர்வ இணையதளம்www.cutn.ac.in
கல்வித்தகுதிAny Degree – (ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்)
பதவிOffice Assistant (அலுவலக உதவியாளர்)
விண்ணப்பக் கட்டணம்இல்லை

வயது வரம்பு:

இந்த அலுவலக உதவியாளர் வேலைக்கு விண்ணப்பிப்பதற்கு, வயது வரம்பு குறித்து எந்தவொரு தகவலும் அறிவிப்பில் கொடுக்கவில்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு நேர்க்காணல் மூலம் விண்ணப்பத்தாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் பின்வரும் மின்னஞ்சலுக்கு பயோ-டேட்டா/CVஐ இணைத்து அனுப்பவும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய ஈமெயில் முகவரி

[email protected]

CUTN Thiruvarur Recruitment 2023 Notification Details


RECENT POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here