தனியார் தொலைக்காட்சியில் மக்களை மிகவும் கவர்ந்தஒரு தொலைக்காட்சியாக விஜய் டிவி இருந்து வருகிறது. ஏனென்றால் இதில் வரும் ரியாலிட்டி ஷோக்களும் மக்களை கவரும்படியாக இருக்கும். குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர் உள்ளிட்டவை பெரும்பாலான மக்களால் பார்க்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் சமீப காலமாகவே ஒளிபரப்பப்பட்டு வந்த நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதற்காகவே இந்த ஷோவை ஏராளமானோர் பார்ப்பது உண்டு.

இந்நிலையில், தற்பொழுது பிக்பாஸ் 7 தொடங்க உள்ளதாக விஜய் டிவி அறிவித்துள்ளது. சமீபத்தில் கூட அதற்கான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. பிக்பாஸ் சீசன் 7 ப்ரோமோ வெளியானதிலிருந்தே பலரும் பிக்பாஸில் யாரெல்லாம் வர போறாங்க? எந்த நடிகர்கள் வர போறார்கள்? என்று கேள்வி எழுப்பி வந்தனர்.
இதையடுத்து, தற்பொழுது பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் லிஸ்ட் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சீசனில் பிரபலங்கள் பலரை களத்தில் இறக்க பிக்பாஸ் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் புதுமைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் என்று கூறப்படும் 18 பேரின் லிஸ்ட் இதோ : கோவை பஸ் டிரைவர் ஷர்மிளா, நடிகர் அப்பாஸ், நடிகை தர்ஷா குப்தா, நடிகை அம்மு அபிராமி, வி.ஜே ரக்சன், ஜாக்லின், காக்கா முட்டை விக்னேஷ், ஸ்ரீதர் மாஸ்டர், மாடல் ரவி குமார், மாடல் நிலா, நடிகை ரச்சிதா கணவர் தினேஷ், ரேகா நாயர், சந்தோஷ் பிரதாப், செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், பப்லு, அகில், சோனியா அகர்வால், வி.ஜே. பார்வதி ஆகியோர் பங்கேற்க உள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.