வாட்ஸ் அப் பயன்படுத்துபவரா நீங்க? அப்ப உடனே இதை கவனியுங்க…! இனி வாட்ஸ் மூலம் வியாபாரமும் பண்ணலாம்!

0
40
Are you a WhatsApp user Then take care of this immediately Now you can do business through WhatsApp-Whatsapp New Update On Business

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் அப் செயலி உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் உபயோகப்படுத்தும் செயலியாக உள்ளது. வாட்ஸ் அப் என்பது ஸ்மார்ட்ஃபோன்களில் கிடைக்கப்பெறும் இலவசத் தகவல் பரிமாற்றச் செயலியாகும். இந்த செயலி, நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் தகவல்களைப் பரிமாறுவதற்கும், அழைப்பைச் செய்வதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

இந்நிலையில், மெட்டா நிறுவனம் தற்பொழுது வாட்ஸ் அப் பற்றின புதிய தகவலை வெளியிட்டுள்ளது. இதில், மெட்டா நிறுவனம் சில நாடுகளில் வாட்ஸ் அப் செயலியில் ‘வணிகத் தேடல்’ என்கிற புதிய செயல்பாடு ஒன்றை அறிமுகப்படுத்தியது. தற்பொழுது வெளியிட்டுள்ள இந்த செயல்பாடு மூலம் நாம் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே வணிகங்களை மேற்கொள்ள முடியும். இதனால் மக்கள் எளிமையாக வணிகம் செய்ய முடியும்.

மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் இந்த வாட்ஸ் அப்பின் புதிய செயல்பாடுகள் குறித்து பேசுகையில், பொதுமக்களின் வேலைகளை எளிதில் முடிக்க நாங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அதில் ஒரு பகுதி தான் வாட்ஸ் அப்பில் தற்பொழுது வெளியிட்டுள்ள இந்த புதிய செயல்பாடு என்பது குறிப்பிட தக்கது. வாட்ஸ் அப்பின் “வணிக தேடல்” அம்சத்தை இந்தோனேசியா, மெக்சிகோ, கொலம்பியா, யுகே மற்றும் பிரேசில் நாடுகளை சேர்ந்த பயனர்கள் பயன்படுத்த முடியும். ஆனால் இந்தியாவில் இந்த புதிய செயல்பாடு கொண்ட வாட்ஸ் அப் செயலியை எப்பொழுது அறிமுகப்படுத்த உள்ளார்கள் என்பது பற்றி எந்த தகவலையும் அந்நிறுவனம் வெளியிடவில்லை.

வாட்ஸ் அப்பின் புதிய செயல்பாடுகளை எப்படி நம் மொபைலில் செயல்படுத்துவது என்பதை பற்றி பார்ப்போம்.

1. முதலில் வாட்ஸ் அப் செயலியில் உள்ள சாட் ஐகானைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் ‘டிஸ்கவர்’ என்பதை தேர்ந்தெடுத்து அதில் ‘பிஸ்னஸ்’ என்பதை தேர்ந்தெடுக்கவும்.

2. பின், நாம் இருக்கும் இருப்பிடத்தை உள்ளிட்டு கன்டினியூ என்பதை க்ளிக் செய்து உள்ளூர் வணிகங்களைப் பார்க்கலாம்.

3. உங்கள் இருப்பிடம் அல்லாமல் வேறொரு இடத்தையும் நீங்கள் மேப் மூலமாக தேர்வு செய்து வணிகர்களை பார்க்கலாம். மேலும், பிசினஸ் ப்ரோபைலை பார்க்க பிஸ்னஸ் ஆப்ஷனை டேப் செய்ய வேண்டும்.

4. அதன்பின், வணிகர்களிடம் சாட் செய்து வேண்டிய கேள்விகள் மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here