வாக்காளர் அட்டை வைத்திருப்பவர்களா நீங்கள்? அப்ப உடனே இத பண்ணுங்க! இன்றே கடைசிநாள்..!

0
50

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி கடந்த நவ.9-ம் தேதி தொடங்கியுள்ளது. இந்த பணி வரும் டிச.8-ம் தேதி வரை ஒரு மாதம் வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் திருத்துவதற்கான சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் இவற்றுடன் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்பு போன்ற பணிகளை இந்த முகாமில் செய்து கொள்ள முடியும்.

இந்நிலையில், கடந்த மாதம் நடைபெற்ற வாக்காளர் பட்டியலை திருத்துவதற்கான சிறப்பு முகாமில் சுமார் 18 லட்சத்துக்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

இதையடுத்து, இதற்கான சிறப்பு முகாம் டிசம்பர் 8 ஆம் தேதி (இன்று) முடிவடைய உள்ளது. இதனால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு மற்றும் நீக்கம் செய்யாதவர்கள் உடனடியாக செய்து கொள்ளலாம் என்று பொதுமக்களுக்கு தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த சிறப்பு முகாமில் விண்ணப்பித்தவர்களின் படிவங்கள் பரிசீலினை செய்யப்பட்டு அடுத்த ஆண்டு அதாவது 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

RECENT POSTS-ன் வலையிதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here