தல ரசிகரா நீங்க? அஜித் படத்தோட விடாமுயற்சின் லேட்டஸ்ட் அப்டேட் வந்திருக்கு…

0
23
Are you a Thala fan information about the shooting of the film vidaamuyarchi has been revealed

தல அஜித் நடித்த வலிமை படத்தினை தொடர்ந்து புதிதாக அஜித்தை வைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்க இருக்கிறார் இயக்குனர் மகிழ்த்திருமேனி. இவர் இயக்கும் இந்த படத்திற்கு ‘விடாமுயற்சி’ என்ற பெயரை வைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விடாமுயற்சியின் கீழ் ‘முயற்சிகள் ஒருபோதும் தோல்வியடையாது’ என குரிப்பிட்டிருந்தது.

இந்த விடாமுயற்சி படத்தில் யார் யார் நடிப்பார்கள் மற்றும் தொழிநுட்ப கலைஞர்கள் குறித்த விரங்களை விரைவில் வெளியிடப்படும் என அறிவித்தது. தல அஜித் நேபால் மற்றும் பூட்டான் பைக் டூர் செல்ல இருக்கிறார். அவர் அந்த டூரை முடித்த பிறகு வருகின்ற மே மாதம் 22ஆம் தேதியில் சென்னையில் இப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.

மேலும் இந்த விடாமுயற்சி படத்தோட படப்பிடிப்பை 70 நாட்கள் எடுக்கப்போவதாகவும், அதில் 40 நாட்கள் அஜித் நடிக்கும் படப்பிடிப்பை நடத்த முடிவு எடுத்துள்ளதாகவும் தற்போது சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.


RECENT POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here