சென்னை மக்களுக்கு உதவிய அறந்தாங்கி நிஷா! வாழ்த்துக்கள் சகோதரி..!

சென்னை மக்களுக்கு உதவிய அறந்தாங்கி நிஷா! வாழ்த்துக்கள் சகோதரி..!

தமிழகத்தில் வட மாவட்டங்களில் ‘மிக்ஜம்’ புயல் கடந்த சில நாட்களாக மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் புயலின் தாக்கம் மிகவும் அதிகம். கனமழை காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் தங்களின் அன்றாட தேவைகளான உணவு மற்றும் நீர் கூட இல்லாமல் தவிக்கின்றனர். பெரும்பாலான வீடுகளில் மழைநீர் உள்ளே புகுந்து மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ : அழகான கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் படம் – Merry Christmas Wishes in Tamil English

இதனால் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் நிவாரண உதவிகள் வழங்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை கொஞ்சம் கொஞ்சமாக இயல்புநிலைக்கு திரும்பி வருகிறது. ஆனால் இன்னும் சில இடங்களில் மக்கள் சிரமம்பட்டு கொண்டு தான் இருக்கின்றனர். அவர்களுக்கு அரசாங்கத்தின் உதவி தேவைப்படுகிறது.

அரசு மட்டும் இன்றி பல்வேறு அமைப்பினரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி கரம் நீட்டி வருகின்றனர். அந்த வகையில் பிரபல தொலைகாட்சியின் காமெடி நடிகையும், நிகழ்ச்சி தொகுப்பாளரும் ஆகிய அறந்தாங்கி நிஷா பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய முன் வந்துள்ளார். அவர் நிவாரணப் பொருட்களுடன் மக்களுக்கு உதவி செய்ய திருச்சியில் இருந்து சென்னை வந்துள்ளார்.

இந்த மாதிரி வேலை வாய்ப்பு நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top