IIT மெட்ராஸ்ல வேலைக்கான அறிவிப்பு வந்திருக்கு! மாத சம்பளம் ரூ.60,000 முதல் ரூ.75,000 வரை தராங்களாம்!

IIT மெட்ராஸ்ல வேலைக்கான அறிவிப்பு வந்திருக்கு

தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் மெட்ராஸ்(IIT Madras) ஆனது வேலை வாய்ப்பிற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கம்யூனிகேஷன் ஸ்பெஷலிஸ்ட் பணியில் காலியிடம் இருப்பதாக தெரிவித்துள்ளது. IIT மெட்ராஸ் வேலைக்கான முழு விவரங்களையும் iitm.ac.in இல் வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் கால அவகாசம் முடிவதற்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

Communication Specialist பணியில் ஒரு இடம் மட்டும் காலியாக உள்ளதாக அறிவிப்பில் உள்ளது. ஐஐடி மெட்ராஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் Degree/ Masters Degree in Communications, Journalism, Science Writing ஆகியவற்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ.60,000 முதல் ரூ.75,000 வரை வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர் சென்னையில் பணிபுரியலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க கட்டணம் இல்லை. ஐஐடி மெட்ராஸ் நேர்காணல் அடிப்படையில் வேலைக்கான நபரை தேர்ந்தெடுக்கும். தகுதியான விண்ணப்பதாரர்கள் 24-01-2024 முதல் 15-பிப்ரவரி-2024 வரை ஐஐடி மெட்ராஸ் அதிகாரப்பூர்வ வலைத்தளமான iitm.ac.in இல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள வேண்டுமென்றால் IIT Madras Recruitment 2024 Notification என்ற லிங்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top