தமிழ்நாடு அரசின் TNPL யில் வேலை வாய்ப்பு அறிவிப்பு! ரூ.70,100 முதல் ரூ.1,49,960 வரை மாத சம்பளம் வாங்கலாம்!

தமிழ்நாடு நியூஸ்பிரிண்ட் அண்ட் பேப்பர்ஸ் லிமிடெட் (TNPL) வேலை வாய்ப்புக்கான அறிவிப்பை tnpl.com இல் வெளியிட்டுள்ளது. Assistant General Manager பதவியில் ஒரு இடம் காலியாக இருப்பதால் அதற்கான விண்ணப்பங்களை அந்நிறுவனம் வரவேற்கிறது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 24-ஜன-2024 அன்று அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ALSO READ : ஊட்டியில் வேலை செய்ய ஆசையா! அதுவும் அரசு வேலை! வாங்க உடனே விண்ணப்பிக்கலாம்…

கல்வித்தகுதி :

TNPL அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் BL, LLB முடித்திருந்தால் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்கமுடியும்.

வயது வரம்பு :

தமிழ்நாடு நியூஸ்பிரிண்ட் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, 01-01-2024 தேதியின்படி விண்ணப்பதாரர் குறைந்தபட்ச வயது 43 மற்றும் அதிகபட்சம் 50 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்

வயது தளர்வு :

  • OBC விண்ணப்பதாரர்கள்: 3 ஆண்டுகள்
  • SC, ST விண்ணப்பதாரர்கள் : 5 ஆண்டுகள்

அப்ளிகேசன் பீஸ் :

விண்ணப்பிக்க விண்ணப்பக்கட்டணம் இல்லை.

தேர்வு செய்யும் முறை :

Assistant General Manager பதவிக்கு Interview முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

பணியிடம் :

இந்த வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர் சென்னையில் வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படும்.

சம்பளம் :

TNPL உதவி பொது மேலாளர்க்கு மாத சம்பளமாக ரூ.70,100 முதல் ரூ. 1,49,960 வரை வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு நியூஸ்பிரிண்ட் அண்ட் பேப்பர்ஸ் லிமிடெட் விண்ணப்பப் படிவத்தை அதிகாரபூர்வ அறிவிப்பில் இருந்து எடுத்து பூர்த்தி செய்து நிறுவன முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்ப படிவத்தில் தேவையான அனைத்து ஆவணங்களும் இருக்க வேண்டும்.

முகவரி :

General Manager (HR), Tamil Nadu Newsprint and Papers Limited,
No: 67 Mount Road,
Guindy,
Chennai-600032.

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள TNPL- ன் Official Notification & Application Form லிங்கை கிளிக் செய்யவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top