அண்ணா பல்கலைக்கழக வேலைக்கு ஈமெயில் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்பு!

அண்ணா பல்கலைக்கழக வேலைக்கு ஈமெயில் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் வேலை வாய்ப்பிற்கான அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. திட்ட உதவியாளர் பணியாளர்கள் தான் அண்ணா பல்கலைக்கழக வேலைக்கு தேவைப்படுகிறார்களாம். இந்த பதவியில் ஒரு பணியிடம் மட்டும் நிரப்பப்பட உள்ளது. சென்னையில் அரசு வேலை செய்ய நினைபவர்கள் இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

ALSO READ : IIT மெட்ராஸ்ல வேலைக்கான அறிவிப்பு வந்திருக்கு! மாத சம்பளம் ரூ.60,000 முதல் ரூ.75,000 வரை தராங்களாம்!

அண்ணா பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் ME/M.Tech, M.Sc முடித்தவர்கள் மட்டும் இந்த வேலை அறிவிப்புக்கு விண்ணப்பிக்க முடியும். பல்கலைக்கழகத்தின் அறிவிப்பின் படி விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 30 ஆக 01-12-2023 இந்த தேதிப்படி இருக்க வேண்டும்.

Project Assistant வேலைக்கு பணியாளர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் சென்னையிலே வேலை செய்யலாம். விண்ணப்பதாரர்கள் ஈமெயில் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கட்டணம் தேவையில்லை. அண்ணா யுனிவர்சிட்டியின் திட்ட உதவியாளர் வேலைக்கு 18,000 ரூபாய் மாத சம்பளம் பெறலாம்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தேவையான அனைத்து ஆவணங்களுடன் 09-பிப்ரவரி-2024 அன்று அல்லது அதற்கு முன் msvedhanayagam@gmail.com என்ற மின்னஞ்சல் ஐடிக்கு தங்கள் விண்ணப்பத்தை அனுப்பலாம். மேலும் வேலை வாய்ப்பு அறிவிப்பை பார்வையிட Anna University Recruitment 2024 Official Notification லிங்கை கிளிக் செய்யவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top