மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலை செய்ய விண்ணப்பங்கள் வரவேற்பு! மாத சம்பளம் 30 ஆயிரம் ரூபாய்…!

Madurai Kamaraj University Recruitment 2024

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலை செய்ய ஆசையா? இதோ அட்டகாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்காலிக திட்ட நிலை (Temporary Project Position) என்ற பதவிக்கு பணியாளர்களை தேர்வு செய்யப்படவுள்ளது. ஆர்வமுள்ளவங்க ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கவும். மற்ற விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

கல்வித்தகுதி:

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அறிவித்த பணிக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் M.Sc படிப்பை படித்து முடித்திருக்க வேண்டும்.

Also Read >> தமிழக அரசின் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் உடனடி வேலை! 30 ஆயிரம் வரைக்கும் சம்பளம் தராங்களாம்! சீக்கிரமா விண்ணப்பியுங்க…!

பணியிடங்கள்:

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் தற்காலிக திட்ட நிலை பதவிக்கென 01 பணியிடம் ஒதுக்கியுள்ளது. யூனிவெர்சிட்டியில் பணியாற்ற விரும்புபவர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்.

சம்பளம்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.30,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

பணியிடம்:

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அறிவித்த தற்காலிக திட்ட நிலை பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் தமிழகத்திலுள்ள மதுரை மாவட்டத்தில் வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படும்.

இந்த வேலையில் சேர ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 08.01.2024 முதல் 15.01.2024 என்ற கடைசி தேதிக்குள் ஆன்லைன் முறையில் அப்ளை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் விவரங்களை அறிய Madurai Kamaraj University Recruitment 2024 Notification என்ற இந்த லிங்கை கிளிக் பண்ணவும்.

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க Apply Online என்ற இந்த லிங்கை கிளிக் பண்ணவும்.

தமிழக அரசு வேலை வாய்ப்பு நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top