வருங்கால இளைஞர்களின் முன் மாதிரியாக கருதப்படுபவராக உள்ள டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களை பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்.
- இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர்
- அற்புதமான பேச்சாளர்
- சிறந்த ஆசிரியர்
- இந்திய ஏவுகணை நாயகன்
- தொழில்நுட்ப வல்லுநர்
- இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி
- மிகப்பெரிய பொருளாளர்
- இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை
என்று பல்வேறுப் பட்ட பெயர்களால் அப்துல் கலாம் அவர்களை அழைப்பர். கலாம் அவர்களை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். இப்போது, அவரின் வாழ்க்கை வரலாறு பற்றி பார்க்கலாம்.
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு
பிறந்த நாள் : அக்டோபர் 15, 1931
பிறந்த இடம் : இராமேஸ்வரம், தமிழ்நாடு
இயற்கை எய்தின நாள்: ஜூலை 27, 2015
பிறப்பு:

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் 1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் இராமேஸ்வரம் என்னும் ஊரில் பிறந்தார். இது, பாம்பன் தீவில் அமைந்து உள்ள இராமநாதபுரம் மாவட்டத்திலிருக்கும் ஒரு சிறிய நகராட்சி ஆகும். இவரது பெற்றோரான ஜைனுலாப்தீன் மற்றும் ஆஷியம்மா ஆகிய இஸ்லாமிய தம்பதிக்கு மகனாக பிறந்தார்.
இளமைப்பருவத்தில்:
பள்ளிப்படிப்பை, இராமேஸ்வரத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் சேர்ந்து தொடங்கினார். அப்போது இவரது குடும்ப சூழ்நிலை காரணமாக, இவர் வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. அதனால் இவர் பள்ளிக்கு சென்ற நேரம் விடுத்து, கிடைக்கும் நேரங்களில் செய்தித்தாள்களை விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டார். இவருடைய பள்ளி படிப்பை பொறுத்தவரை சராசரி மாணவராகவே இருந்துள்ளார்.
கல்லூரி படிப்பில்:
அப்துல் கலாம் அவர்கள் தனது பள்ளிப்படிப்பினை முடித்த பிறகு, திருச்சியில் உள்ள “செயின்ட் ஜோசப்” கல்லூரியில் இயற்பியல் எடுத்து பயின்றார். இயற்பியலில் இளங்கலை பட்டத்தை, 1954 ஆம் ஆண்டு பெற்றார்.
ஆனால், இவருக்கு இயற்பியல் துறையில் ஈடுபாடு இல்லை என்பதை உணர்ந்து, அதன் பின்னர் சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் 1955 ஆம் ஆண்டு, தனது “விண்வெளி பொறியில் படிப்பை” தொடங்கினார். அதன் பிறகு, அதே கல்லூரியில் தனது முதுகலை படிப்பை முடித்து, முதுகலை பட்டத்தை பெற்றார்.
விஞ்ஞானியாக:

தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையை அப்துல் கலாம் அவர்கள், 1960 ஆம் ஆண்டு விஞ்ஞானியாக வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) தொடங்கினார். அப்போது, இந்திய ராணுவத்திற்காக ஒரு சிறிய ஹெலிகாப்டரை வடிவமைத்துள்ளார். அதன் பிறகு, தனது ஆராய்ச்சி பணிகளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தொடர்ந்தார்.
மேலும், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில், அப்துல் கலாம் அவர்கள் முக்கிய பங்காற்றி உள்ளார். ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக 1980 ஆம் ஆண்டு, SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி விண்ணில் ஏவும்படி செய்தார். இதனால், இந்த பெரும் சாதனை இவருக்கு மட்டுமல்லாது இந்தியாவுக்கே மிகப்பெரும் பெருமையை தேடித் தந்துள்ளது.
இதற்கு மத்திய அரசு, இந்த வியக்கத்தக்க செயலை பாராட்டி, இந்தியாவின் மிகப் பெரிய விருதாக கருதப்படுகின்ற, “பத்ம பூஷன்” விருதினை 1981 ஆம் ஆண்டு அப்துல் கலாம் அவர்களுக்கு, வழங்கி அவரை மேலும் பெருமைப்படுத்தியது. இவர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் 1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை பல்வேறு பணிகளை சிறப்பாக செய்துள்ளார்.
மேலும், “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” 1999 ஆம் ஆண்டு அப்துல் கலாம் அவர்கள் முக்கிய பங்காற்றி உள்ளார். இதுவரை இவர், ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணி புரிந்துள்ளார். மேலும், ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்ற விரும்பினார். இவர் என்றுமே, அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.
குடியரசுத் தலைவராக:

இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக, 2002 ஆம் ஆண்டு, ஜூலை 25 ஆம் நாளன்று, 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, 11-வது குடியரசு தலைவராக பொறுபேற்றார். இவர் குடியசு தலைவராவதற்கு முன்பே, இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா” விருதை மத்தியரசு வழங்கி அப்துல் கலாம் அவர்களை கௌரவித்துள்ளது.
இதனால், “பாரத ரத்னா” விருது பெற்ற இந்தியாவின் 3-வது குடியரசு தலைவர் என்கின்ற பெருமையை, அப்துல் கலாம் அவர்கள் பெற்றுள்ளார். இவர், 2007 ஆம் ஆண்டு வரை குடியரசு தலைவராக இருந்துள்ளார்.
இதன் காரணமாக, மக்கள் அன்போடு “மக்களின் ஜனாதிபதி” என்று அப்துல் கலாம் அவர்களை அழைக்கின்றனர். மேலும், 2007 ஆம் ஆண்டு குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்பிய கலாம் அவர்கள், ஒரு சில காரணங்களால் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று முடிவு செய்து, தேர்தலில் இருந்து விலகினார்.
மரணம்:

ஷில்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் 2015 ஆம் ஆண்டு மேடையில் பேசிக்கொண்டிருந்த போதே, கீழே மயங்கி விழுந்து தனது இன்னுயிரை இழந்தார்.
விருதுகள்:

- 2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது
- 2012 – சட்டங்களின் டாக்டர்
- 2010 – பொறியியல் டாக்டர் பட்டம்
- 2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது
- 2009 – ஹூவர் மெடல்
- 2008 – பொறியியல் டாக்டர் பட்டம்
- 2007 – கிங் சார்லஸ்-II பட்டம்
- 2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்
- 2000 – ராமானுஜன் விருது
- 1998 – வீர் சவர்கார் விருது
- 1997 – பாரத ரத்னா
- 1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது
- 1990 – பத்ம விபூஷன்
- 1981 – பத்ம பூஷன்
எழுதிய நூல்கள்:

- அக்னி சிறகுகள்
- எழுச்சி தீபங்கள்
- அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை
- இந்தியா 2020
கனவு காணுங்கள்..!

வாழ்வின் இறுதி வரை, திருமணம் செய்துக் கொண்டு குடும்ப வாழ்வில் ஈடுபடாமலேயே, வாழ்ந்த அப்துல் கலாம் அவர்கள் எளிமையான பண்பிற்கும், சிறப்பான ஆளுமைக்கும், அறிவு கூர்மைக்கும் என்றுமே உதாரணமாக போற்றப்படுகிறார். இவருடைய பேச்சாற்றல் அனைவரது, மனதையும் வியப்பில் ஆழ்த்தும் என்பதில் சிறிது ஐயமில்லை.
எதிர்காலம் என்றுமே, இந்திய இளைஞர்கள் கையில்தான் உள்ளது என்று நம்புவது மட்டுமல்லாது, “கனவு காணுங்கள்! என்றும் அந்த கனவு கனவாகவே இருக்க விடாமல், நினைவாக மாற்ற பாடுபடுங்கள்” என்றும் கூறியவர்.
இவ்வுலகமே போற்றும் மாமனிதராகவும், விஞ்ஞானியாகவும் தன்னுடைய வாழ்வை வாழ்ந்த கலாம் அவர்கள் தனது வாசகங்களாலும், பொன்மொழிகளாலும், கவிதைகளாலும் பேச்சாற்றலாலும் அனைவரது மனதையும் கவந்து, இவ்வுலகை விட்டு நீங்கினாலும் மக்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார்.
RECENT POSTS IN VALAIYITHAL
- இந்தியா முழுவதும் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்டில் 11705 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பை வெளியிட்டுள்ளது! Central Govt Jobs 2023
- தமிழ்நாடு மத்திய பல்கலைகழகத்தில் மாதம் ரூ.31000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு! Central Govt Jobs 2023
- பல்வேறு காலியிடங்களுக்கு இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் புதிய வேலை அறிவிப்பு! Central Govt Jobs 2023
- டிகிரி படித்தவர்களுக்கு தமிழ்நாடு பல்லுயிர் வாரியத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலை அறிவிப்பு! Tamil Nadu Govt Jobs 2023
- தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சிராப்பள்ளியில் புதிய வேலை வாய்ப்பு! Tamil Nadu Govt Jobs 2023