அப்துல் கலாம் பொன்மொழிகள் – APJ Abdul Kalam Quotes in Tamil

APJ Abdul Kalam Quotes in Tamil
APJ Abdul Kalam Quotes in Tamil

எளிமையான வாழ்க்கை முறை, இனிமையான பேச்சு என எல்லார் மனதிலும் நீங்க இடம் பிடித்தவர் தான் அப்துல் கலாம். தமிழ்நாட்டில் இருக்கும் இராமேஸ்வரம் மாவட்டத்தில் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாளில் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக பிறந்தார். இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தன்னுடைய பள்ளி படிப்பை தொடங்கினார். இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், படித்துக்கொண்டே செய்தித்தாள்கள் விநியோகம் செய்யும் வேலைக்கு சென்றார். பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் திருச்சியிலுள்ள ‘செயின்ட் ஜோசப் கல்லூரியில்’ 1954 ஆம் ஆண்டு இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என இவர் உணர்ந்ததால், 1955 ஆம் ஆண்டு தன்னுடைய ‘விண்வெளி பொறியில் படிப்பை’ சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கினார். இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, மிகப்பெரிய பொருளாளர், தொழில்நுட்ப வல்லுநர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படுகிறார் ஏ. பி. ஜே. அப்துல் கலாம்.

Motivational Abdul Kalam Quotes in Tamil

APJ Abdul Kalam Thoughts for Students
APJ Abdul Kalam Thoughts for Students

“வாய்ப்புக்காக காத்திருக்காதே
உனக்கான வாய்ப்பை
நீயே ஏற்படுத்திக்கொள்”

Abdul Kalam Quotes for Success
Abdul Kalam Quotes for Success

“வெற்றி பெறவேண்டும் என்ற
பதற்றம் இல்லாமல் இருப்பதுதான்
வெற்றி பெறுவதற்கான
சிறந்த வழி”

DR APJ Abdul Kalam
DR APJ Abdul Kalam

“ஒரு மனிதனை ஜெயிப்பதை விட அவன்
மனதை கொள்ளை கொள்வதே சிறந்தது”

Success Abdul Kalam Quotes in Tamil
Success Abdul Kalam Quotes in Tamil

“பிரச்சனைகளை சகித்துக் கொள்ளாமல்
எதிர்கொள்ளத் துணியுங்கள்
பயந்தால் வரலாறு படைக்க முடியாது!”

Abdul Kalam Speech in Tamil
Abdul Kalam Speech in Tamil

“கனவு காணுங்கள் ஆனால்
கனவு என்பது நீ தூக்கத்தில்
காண்பது இல்லை
உன்னை தூங்க விடாமல் பண்ணுவது
எதுவோ அதுவே கனவு”

தன்னம்பிக்கை கவிதைகள் – Motivational Quotes in Tamil

Positive Thinking Abdul Kalam Quotes
Positive Thinking Abdul Kalam Quotes

“சிந்திக்க தெரிந்தவனுக்கு
ஆலோசனை தேவை இல்லை
துன்பங்களை சந்திக்க தெரிந்தவனுக்கு
வாழ்க்கையில் தோல்வியே இல்லை”

Abdul Kalam Motivational Quotes in Tamil
Abdul Kalam Motivational Quotes in Tamil

“அதிகம் பயணிக்காத பாதைகளில் செல்லும் துணிவை வளர்த்தெடுங்கள்
அதுதான் உண்மையான தலைமைப்பண்பு”

APJ Abdul Kalam Motivation
APJ Abdul Kalam Motivation

“உங்கள் குறிக்கோளில் வெற்றியடைய வேண்டுமானால்
உங்கள் இலக்கில் இம்மியும் பிசகாமல் குறிவைத்து
அதே சிந்தனையுடன் செயல்படவேண்டும்”

அப்துல் கலாம் சிந்தனைகள்
அப்துல் கலாம் சிந்தனைகள்

“உன் கை ரேகையை பார்த்து
எதிர்காலத்தை நிர்ணயத்துவிடாதே ஏனென்றால்
கையே இல்லாதவனுக்கு கூட
எதிர்காலம் உண்டு”

Motivational Abdul Kalam Quotes in Tamil
Motivational Abdul Kalam Quotes in Tamil

“மரியாதை இல்லாத இடத்தில்
சற்று ஒதுங்கியே இரு!
நாளை உன் மதிப்பு தெரிந்த பின்,
அவர்களே உன்னை தேடி வருவார்கள்!
அதுவரை சற்று பொறுமையாய் இரு!”

அப்துல் கலாம் பொன்மொழிகள் தமிழ்
அப்துல் கலாம் பொன்மொழிகள் தமிழ்

“நமது பிறப்பு சம்பவமாக இருக்கலாம் ஆனால்,
இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும்”

APJ Abdul Kalam Quotes
APJ Abdul Kalam Quotes

“நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டி இடுவது இல்லை”

APJ Abdul Kalam
APJ Abdul Kalam

“கனவுகளை எண்ணங்களாக மாற்றுங்கள்
எண்ணங்களை செயல்களாக மாற்றுங்கள்”

Success Quotes in Tamil – வெற்றி வார்த்தைகள்

அப்துல் கலாம் பொன்மொழிகள்
அப்துல் கலாம் பொன்மொழிகள்

“ஒரு முறை வந்தால் கனவு
இருமுறை வந்தால் ஆசை
பலமுறை வந்தால் அது இலட்சியம்”

APJ Abdul Kalam Tamil
APJ Abdul Kalam Tamil

“ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல
உன்னை போன்ற சாதிக்க துடிக்கும் புத்திசாலிகளை மட்டும்”

Quote of APJ Abdul Kalam
Quote of APJ Abdul Kalam

“வெற்றி என்பது உன் நிழல் போல
நீ வெளிச்சத்தை நோக்கி நடக்கும் போது
அது உன்னுடன் வரும்”

APJ Abdul Kalam Quotes in Tamil
APJ Abdul Kalam Quotes in Tamil

“கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே
அது உன்னை கொன்று விடும்
கண்ணை திறந்து பார்
நீ அதை வென்று விடலாம்”

Abdul Kalam Quotes in Tamil
Abdul Kalam Quotes in Tamil

“நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை
நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும்
உன் உழைப்பால் நீ எண்ணியது
உன்னை வந்து சேரும்
நீ நீயாக இரு”

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top