அண்ணாமலை பல்கலைக்கழகத்துல Project Associate வேலைக்கு 25,000 ரூபாய் சம்பளம் தராங்களாம்! உடனே அப்ளை பண்ணிடுங்க!

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதில் Project Associate பணியை நிருப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி முடிவதற்குள் ஆப்லைனில் விண்ணப்பித்துவிடுங்கள். இப்பணியில் ஒரு இடம் மட்டுமே காலியாக உள்ளது. Annamalai University இந்த வேலைக்கான அறிவிப்பை அதிகாரபூர்வ இணையதளமான https://annamalaiuniversity.ac.in/.
இல் வெளியிட்டுள்ளது.

ALSO READ : ஐபோன் வாங்க போறீங்களா? இதோ அட்டகாசமான வசதியுடன் ஆப்பிள் ஐபோன் இருக்கே… இப்பவே ஆர்டர் பண்ண உடனே க்ளிக் பண்ணுங்க!

Project Associate பதவிக்கு கல்வித்தகுதியானது ME/M.Tech துறையில் தேர்ச்சி பெற்றவர்களால் மட்டும் விண்ணப்பிக்க முடியும். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தேர்ந்தெடுக்கும் நபருக்கு மாத சம்பளம் ரூ. 25,000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. அண்ணாமலை யுனிவர்சிட்டியின் அதிகாரபூர்வ அறிவிப்பில் வயது வரம்பு பற்றி எதுவும் குறிபிடப்படவில்லை. இந்த பணிக்கு பணியாளர்களை தேர்ந்தெடுக்க எழுத்து தேர்வு ஏதும் இல்லாமல் நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கின்றனர்.

விண்ணப்பதாரர்கள் ஆப்லைனில் விண்ணப்பிப்பதால் விண்ணப்பக்கட்டணம் தேவையில்லை. Project Associate வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணாமலை யுனிவர்சிட்டியில் பணிபுரியலாம். இதற்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ள நபர்களுக்கு கால அவகாசம் ஜனவரி 4,2024ஆம் தேதி முதல் ஜனவரி 20,2024ஆம் தேதி வரை கொடுக்கப்பட்டுள்ளது.

எனவே விண்ணப்பதாரர்கள் முழு பயோ டேட்டா மற்றும் தேவையான ஆவணங்களுடன் பின் வரும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அஞ்சல் முகவரி :

Dr.P.Sivaraj ME PhD,
Associate Professor,
Principal Investigator,
Department of Manufacturing Engineering,
Annamalai University,
Chidambaram-608002.

மேலும் சில தகவல்களை பெற வேண்டும் என்றால் Official Notification பார்த்து தெரிந்துக்கொள்ளலாம்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top