சற்று முன் வந்த அறிவிப்பு! சிங்கப்பூர் அதிபராக ஆட்சியை பிடித்து வெற்றிக்கொடி நாட்டிய தமிழர்!

Today Political News 2023

Today Political News 2023

சிங்கப்பூர் நாட்டின் 9வது அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூரின் அதிபராக ஏற்கனவே ஹலிமா யாகூப்பின் பதிவியில் இருந்தார். இவருடைய பதவி காலம் 6 ஆண்டுகள் வருகிற செப்டம்பர் மாதம் 13ஆம் தேதியில் முடிவடைகிறது. இதனால் அடுத்த அதிபர் பதவிக்கு தேர்தல் செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த அதிபர் பதவிக்கு தர்மன் சண்முகரத்னம், காக் சோங் , டான் கின் லியான் ஆகியோர் அதிபர் தேர்தலுக்கு போட்டியிட்டனர். மூவரும் கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று சிங்கப்பூரில் பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். அதைத்தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு அதிபர் யார் என்று முடிவுகளும் வெளியானது.

Also Read >> கோடிக்கணக்கான சொத்து மதிப்புள்ள நிறுவனத்தை வெறும் 90 ரூபாய்க்கு விற்பனை! எதனாலன்னு தெரியுமா?

அதிபர் தேர்தலில் போட்டியிட்ட காக் சோங், டான் கின் லியான் ஆகிய இருவரையும் பின்னுக்கு தள்ளி 70.4 சதவீத வாக்குகளைப் பெற்று தர்மன் சண்முகரத்னம் வெற்றி பெற்றதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்ற தர்மன் சண்முகரத்தினத்திற்கு பிரதமர் லீ சியன் லூங் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும், பலரும் இவருக்கு தங்களது பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.