இப்படி ஒரு அதிநவீன வசதியுடன் சென்னையில் விமான நிலையமா? மத்திய மந்திரி வி.கே.சிங் ஆய்வு

0
49
An airport in Chennai with such a state-of-the-art facility Union Minister VK Singh study-Chennai Airport New Terminal To Open

சென்னை விமான நிலைய புதிய முனையம் அடுத்த மாதம் திறப்பிறகான பணிகளை மந்திரி வி.கே.சிங் ஆய்வு செய்தார். இந்த பணிகள் நிறைவுபெரும் நிலையில் இருப்பதால் டிசம்பர் மாதம் இறுதியில் திறக்க உள்ளதாக திட்டமிட்டுள்ளார்.

சென்னை விமான நிலையத்தின் பணிகள்:

சென்னை விமான நிலையத்தில் புதிய நவீன முனையம் அமைக்கும் பணி 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதனை பிரதமா் மோடி, காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த புதிய முனையம் ரூ.2,467 கோடி மதிப்பீட்டில் 2 லட்சத்து 20 ஆயிரத்து 972 சதுர மீட்டா் பரப்பளவில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் 2 கட்டங்களாக கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தின் வசதிகள்:

முதல் கட்ட பணியில் 6 அடுக்கு ‘மல்டிலெவல் காா் பாா்க்கிங்’ வசதிகள், பயணிகளுக்கு பாதுகாப்பு சோதனை, குடியுரிமை சோதனை, சுங்கச்சோதனை ஆகியவைகளுக்கான விசாலமான கூடங்கள், கூடுதல் கவுண்ட்டா்கள், வி.வி.ஐ.பி.களுக்காக ஓய்விடங்கள், பயணிகள் தங்கும் அறைகள் உள்ளிட்டவைகள் கட்டப்பட்டுள்ளன. விமான நிலையத்தில் முதல் கட்ட பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன.

மத்திய மந்திரி வி.கே.சிங் ஆய்வு:

திறப்பு விழாவுக்கு தயாராகி கொண்டு இருக்கும் சென்னை விமான நிலைய புதிய நவீன முனையத்தை மத்திய விமான போக்குவரத்து துறையின் இணை மந்திரியான வி.கே.சிங் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது அதிகாரிகளிடம் அவர் சில விளக்கங்களையும் கேட்டறிந்தார். மேலும் பணிகளை விரைவாக முடிக்கவும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இரண்டம் கட்ட பணிகள்:

இந்த புதிய முனையத்தின் இரண்டாம் கட்ட பணிகள் நிறைவுபெற்று திறப்பு விழா அடுத்த மாதம் இறுதிக்குள் நடைபெறும் என்றும் விரைவில் மக்கள் பயன்பாட்திற்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பயணிகளின் எண்ணிக்கை 17 கோடியாக உள்ளது என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை வரும் 2024-ம் ஆண்டு டிசம்பரில் 35 கோடியாக இருக்கும் என்பதால் இதற்கான பணி நடைபெற்று வருகிறது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here