ஆவின் நிறுவனத்துக்கு எதிராக அமுல் நிறுவனம் இல்லை… அமுல் நிறுவனம் விளக்கம்…!

0
9
ஆவின் நிறுவனத்துக்கு எதிராக அமுல் நிறுவனம் இல்லை

நம்முடைய அன்றாட வாழ்கையில் பால் ஒரு அத்தியாவசியாமாக திகழ்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் செயல்பட்டு வரும் அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதை தடுக்க வேண்டும் என கோரி, மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷாவுக்கு மாண்புமிகு தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை அனுப்பினார்.

அமுல் நிறுவனத்தின் தமிழ்நாடு ஒப்பந்ததாரர் அறிக்கை ஒன்றை வெளியுட்டுள்ளார். அதில் அவர் கூறியது.. நாங்கள் ஆவின் நிறுவனத்தை விட அமுல் பால் அதிகப்படியான விலைக்கு கொள்முதல் செய்கிறோம் என்பது மிகவும் பொய்யானது. விவசாய மக்களின் பாதிப்பை தடுப்பதற்காகவே அமுல் நிறுவனம் என்றும் செயல்படும். ஒரு போதும் ஆவின் நிறுவனத்துக்கு எதிராக செயல்படாது.

மேலும் ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் விலையாக என்ன தொகையை நிர்ணயம் செய்துள்ளதோ அதே விலைக்கே நாங்களும் கொள்முதல் செய்கிறோம். அமுல் நிறுவனத்திற்கு பால் வழங்க வேண்டும் என்று ஆவின் நிறுவன பால் முகவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கக்கூடிய நபர்கள், அமுல் நிறுவனத்திற்கு மாற வேண்டும் என்றால் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். மேலும் குறைந்த விலைக்கே விவசாயிகளிடம் இருந்து தனியார் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்கின்றன” என தெரிவித்தார்.


LATEST POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here