இன்று அம்பேத்கரின் வெண்கல சிலை திறப்பு – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

0
41

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று பதவி ஏற்ற பிறகு முதன்முதலாக தென்காசிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க ரயிலில் நேற்று பயணித்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு விமானம் மூலம் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார் என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில், முதன்முறையாக தென்காசிக்கு ரயிலில் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் நேற்று இரவு மதுரை வந்தடைந்தார்.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் அம்பேத்கர் மணிமண்டபத்தில் தமிழக அரசு சார்பில் திருவுருவச் சிலை நிறுவப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மணிமண்டபத்தில் அம்பேத்கர் வெண்கல சிலையானது மணிமண்டபம் நுழைவு வாயிலில் பொதுமக்கள் பார்வைக்காக கட்டப்பட்டது.

அம்பேத்கரின் வெண்கல சிலையை திறப்பதற்கான நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழிச்சியில், அண்ணல் அம்பேத்கர் அவர்களின் முழு திருவுருவச் சிலையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார். இந்த விழாவில், திமுக மூத்த அமைச்சர்களான துரைமுருகன், எ.வ.வேலு, பொன்முடி, மா.சுப்பிரமணியன் ஆகியோரும், விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் விசிக சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இன்று காலை மதுரையில் மாநாகராட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் மூ.க. ஸ்டாலின் தூய்மை பணியாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் தூய்மை பணியாளர் மேம்பாட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும், தூய்மை பணியாளர்களுக்கான காலணிகள், கவச உடைகள், கையுறைகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களையும் முதல்-அமைச்சர் வழங்கினார்.

RECENT POSTS-ன் வலையிதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here