நாளை அனைத்து பள்ளிகளும் செயல்படும்..! சற்றுமுன் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

All schools will function tomorrow An important announcement released by the Department of School Education see here

தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ம் தேதி ஆண்டு தோறும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாப்படுகிறது. அந்த தினத்தில் பள்ளிகளில் சிறப்பு நிகழ்வுகள், கலை இலக்கிய போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்நாளில் மாணவர்கள் புத்தாடை அணிந்து, விழா எடுத்து காமராஜர் படத்துக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, ஜூலை 15ம் தேதியான நாளை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர், மேல்நிலைப் பள்ளிகளுக்கு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

அன்றைய நாளில் காமராஜரின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தவும், பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி , கட்டுரைப் போட்டி , கவிதைப் போட்டி போன்றவற்றை பள்ளி ஆசிரியர்களின் மேற்பார்வையில் நடத்திடவும் , பரிசுகள் வழங்கி ஊக்குவித்திடவும் அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.


LATEST POSTS IN VALAIYITHAL.COM