டி20 வரலாற்றிலேயே வெறும் 15 ரன்களில் ஆல் அவுட்…! எந்த அணி என்று தெரியுமா?

0
46

ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று சிட்னி தண்டர் – அடிலெய்ட் ஸ்ட்ரைக்ஸ் அணிகள் இடையே போட்டி நடைபெற்றது. இதில், முதலில் பேட் செய்த அடிலெய்ட் ஸ்ட்ரைக்ஸ் 9 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிட்னி தண்டர் அணி களமிறங்கியது. அடிலெய்ட் அணியினர் பந்துவீச்சில் அனல் பறந்தது. அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்த நிலையில், சிட்னி அணியினர் 5.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 15 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

சிட்னி அணியில் 5 பேர் டக் அவுட்டாகினர். ப்ரெண்டன் டோக்கேட் 4 ரன்கள் எடுத்ததே அதிகபட்சம் ஆகும். அடிலெய்ட் அணியில் அதிகபட்சமாக ஹென்றி 5 விக்கெட்டுகளையும், வெஸ் அகர் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனால், அடிலெய்ட் அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சிட்னியில் இன்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதன்படி, அடிலெய்ட் பேட்டிங்கை ஷார்ட் – வெதரால்ட் ஜோடி ஆட்டத்தை தொடங்கியது. ஷார்ட் 9 ரன்களிலும், வெதரால்ட் 10 ரன்களிலும் ஆட்டமிழக்க அடுத்து வந்த ஆம் ஹோஸ் 4 ரன்களில் அவுட்டானார்.

RECENT POSTS-ன் வலையிதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here