அகில இந்திய ஆக்கி போட்டி : அரைஇறுதி சுற்றுக்கு முன்னேறிய இரு அணிகள்

சென்ன எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் எம்.சி.சி. முருகப்பா தங்க கோப்பைக்கான 94 வது அகில இந்திய ஆக்கி போட்டி நடைபெற்று வருகிறது. அதில் கடைசி நாளான நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தின் முதல் ஆட்டத்தில் இந்திய ராணுவ அணி 6-0 என்ற கோல் வித்தியாசத்தில் இந்திய விமானப்படையை வென்றது. இதனை தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் மத்திய தலைமைச் செயலக அணி 6-2 என்ற கோல் வித்தியாசத்தில் தற்போதைய சாம்பியன் இந்தியன் ஆயிலுக்கு பெரும் அதிர்ச்சியை பரிசாக கொடுத்தது. இந்தியன் ஆயில் வீரர்களின் அனைத்து முயற்சிகளையும் முறியடித்து தலைமைச் செயலக கேப்டனும், கோல் கேப்டேன் நவீன்குமாரும் அமர்க்களப்படுத்தினார்கள்.

All India Hockey Tournament Two teams advance to semi finals read it

லீக் ஆட்டத்தின் இறுதி முடிவில் ‘ஏ’ பிரிவில் இந்தியன் ரெயில்வே அணி 8 புள்ளியுடன் முதலிடத்தைப் பிடித்தது. கர்நாடகா, இந்தியன் ஆயில் அணி 7 புள்ளியுடன் சமநிலையில் இருந்தன. அதன்பின் கர்நாடக அணி 2 வது இடத்தைப் பெற்று முன்னிலையிலும் இந்தியன் ஆயில் அணி 3 வது இடத்திற்கும் பின்தள்ளப்பட்டது. எனவே, இந்தியன் ரெயில்வே மற்றும் கர்நாடகா அணிகள் சுற்றின் அரை இறுதிக்கு சென்றன. மத்திய தலைமைச் செயலகம் 6 புள்ளிகள் எடுத்து 4 வது இடத்தையும், இந்திய கடற்படை கடைசி இடத்தையும் பெற்றன. கர்நாடகா அணியினர் நேற்று காலை அவர்களது சொந்த ஊருக்கே சென்று விட்டனர். ஏனெனில் இந்தியன் ஆயில் மிகவும் வலுவான அணி என்பதால் மிக எளிதாக கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றிபெற்று அரைஇறுதிக்கு முன்னேறி விடும் என்று நினைத்தனர். ஆனால் அரைஇறுதிக்கு செல்லும் வாய்ப்பை கர்நாடகா அணியினர் பெற்றதால் இன்று சென்னை திரும்புகின்றனர்.

Also Read : Teachers Day Speech Competition in Tamil | ஆசிரியர் தினம் பேச்சு போட்டி | Happy Teachers Day 2023

‘பி’ பிரிவில் இந்திய ராணுவ அணி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி அணி தலா 9 புள்ளியுடன் முதல் 2 இடங்களை வென்று அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. மத்திய தணிக்கை துறை 7 புள்ளிகளும், இந்திய விமானப்படை 3 புள்ளிகளும், தமிழ்நாடு 1 புள்ளியும் எடுத்து முறையே 3-வது, 4-வது, 5-வது இடங்களை பெற்று அரைஇறுதிக்கு செல்லும் வாய்ப்பை தவறவிட்டது. இன்று போட்டி தொடரின் ஓய்வு நாளாகும். ஆகையால் நாளை நடைபெறவிருக்கின்ற அரைஇறுதி ஆட்டங்களில் இந்தியன் ரெயில்வே-கர்நாடகா (மாலை 4 மணி) அணிகள், இந்திய ராணுவம்-பஞ்சாப் நேஷனல் வங்கி (மாலை 6 மணி) அணிகள் மோதுகின்றன.