தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் தொடங்கியது. கடந்த மாதத்தில் ஒரு சில நாட்களில் தமிழகம் முழுவதும் மழை பெய்தது. கடந்த சில நாட்களாக மழை பெய்யாமல் இருந்தநிலையில், தற்போது வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. தென்கிழக்கு வங்க கடலில் அந்தமான் அருகே உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வலுபெற்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று புயலாக வலுபெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவு இந்த தாழ்வு மண்டலம் வலுபெற்று புயலாக மாற உள்ளது. இந்த புயலுக்கு’மாண்டஸ் புயல்’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த புயலானது காரைக்கால் பகுதிகளில் இருந்து 560 கி.மீ. தூரத்திலும் சென்னையில் இருந்து 640 கி.மீ தூரத்திலும் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ‘மாண்டஸ் புயல்’ புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிக்கோட்டாவுக்கும் இடையே 75 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் நாளை (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு பலத்த காற்றுடன் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
RECENT POSTS-ன் வலையிதழ்
- இந்தியா முழுவதும் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்டில் 11705 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பை வெளியிட்டுள்ளது! Central Govt Jobs 2023
- தமிழ்நாடு மத்திய பல்கலைகழகத்தில் மாதம் ரூ.31000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு! Central Govt Jobs 2023
- பல்வேறு காலியிடங்களுக்கு இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் புதிய வேலை அறிவிப்பு! Central Govt Jobs 2023
- டிகிரி படித்தவர்களுக்கு தமிழ்நாடு பல்லுயிர் வாரியத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலை அறிவிப்பு! Tamil Nadu Govt Jobs 2023
- தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சிராப்பள்ளியில் புதிய வேலை வாய்ப்பு! Tamil Nadu Govt Jobs 2023