ஒன்லி வாக்-இன் இன்டர்வியூ…! அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Alagappa University Recruitment 2024 Notification

Alagappa University Recruitment 2024

அழகப்பா பல்கலைக்கழக வேலைக்காக காத்திருப்பவரா நீங்கள்? இதோ தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. Research Assistant, Field Survey Investigator என்ற பணியிடங்களை நிரப்ப இப்பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. எத்தனை காலியிடங்கள், சம்பளம், கல்வித்தகுதி போன்ற விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். முழுவதையும் கவனமாக படித்து இந்த அருமையான வேலை வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

பணியிடங்கள் குறித்த விவரம்:

அழகப்பா யுனிவர்சிட்டியில் ஆராய்ச்சி உதவியாளர், கள ஆய்வு ஆய்வாளர் பணிகளுக்கு மொத்தமாக 02 காலி இடங்களை நிரப்ப உள்ளனர். அதாவது ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கு 01 காலியிடமும், கள ஆய்வு ஆய்வாளர் பதவிக்கு 01 காலியிடமும் என 2 காலி பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

அழகப்பா பல்கலைக்கழகம் அறிவித்த வேலையில் சேர விரும்பினால் நீங்கள் PG with M.Phil/SET/NET படிப்பில் தேர்ச்சிபெற்றவராக இருக்க வேண்டும். இந்த கல்வித்தகுதியானது ஆராய்ச்சி உதவியாளர், கள ஆய்வு ஆய்வாளர் என இரண்டு வகையான பதவிகளுக்கும் பொருந்தும்.

சம்பள விவரம்:

அழகப்பா பல்கலைக்கழகம் ஆராய்ச்சி உதவியாளர் பணிக்குகு தேர்வு செய்யப்படும் நபருக்கு மாத சம்பளமாக ரூ.20,000 வழங்கப்படவுள்ளது. அதேபோல, கள ஆய்வு ஆய்வாளர் பணிக்கு தேர்வு செய்யப்படும் நபருக்கு மாத சம்பளமாக ரூ.10,000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

வேலை செய்யும் இடம்:

ஆராய்ச்சி உதவியாளர், கள ஆய்வு ஆய்வாளர் பணிகளுக்கு செலக்ட் ஆகும் நபர்கள் தமிழகத்திலுள்ள சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைகழகத்தில் வேலைக்கு பணியமர்த்தப்படுவார்கள்.

Also Read >> பொங்கல் 2024 பரிசு தொகுப்பு! 3,000 ரூபாய் உயர்த்தி வழங்க தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!

விண்ணப்பிக்கும் முறை:

அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலை செய்ய விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் வருகின்ற 11 ஜனவரி 2024 (வியாழக்கிழமை) அன்று 11.30 மணியளவில் நடைபெறும் வாக்-இன் இன்டர்வியூவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நேர்காணல் நடைபெறும் இடம்

Department of Physical Education and Health Sciences,
Alagappa University,
Karaikudi-630003.

இந்த வேலைவாய்ப்பு தகவலை மேலும் அறிந்துகொள்ள Alagappa University Recruitment 2024 Notification என்ற இந்த லிங்கை கிளிக் பண்ணவும்.

இது போன்ற தமிழ்நாடு அரசு வேலையை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top