அடேங்கப்பா… வாட்ஸ் அப்பில் இப்படியொரு வசதி வரப்போகுதா? சற்றுமுன் வெளியான சுப்பர் அப்டேட்!!

மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ் அப் நிறுவனம் உலகம் முழுவதும் கோடிகணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது. பொதுவாக அனைத்து வகையான ஸ்மார்ட் போன் யூசர்களும் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றனர். இந்த வாட்ஸ் செயலி வணிக ரீதியான பயன்பாட்டிற்கும் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ் அப் நிறுவனம் தனது பயனாளர்களை கவரும் வகையில், அவ்வபோது புதிய புதிய அப்டேட்டுகளை வழங்கி வருகிறது.

அந்த வகையில், தற்பொழுது வாட்ஸ் அப் நிறுவனம் சூப்பர் அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி, 60 நொடிகளுக்கு தனிப்பட்ட வீடியோக்களை மற்றவர்களுக்கு பகிரும் வகையிலான அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. முதலில் ஒரு வீடியோவை தேர்வு செய்ய வேண்டும். அதன்பின், பயனாளர்கள் தங்கள் சொந்த குரலில் பேசியோ அல்லது பாடியோ அந்த வீடியோவுடன் சேர்த்து கொள்ள முடியும்.

இந்நிலையில், இந்த புதிய அப்டேட்டானது whatsapp செயலியில் உள்ள Switch To Video Mode என்ற Option னில் கொடுக்கப்பட்டிருக்கும். அதனை ON செய்து வீடியோவினை ரெக்கார்ட் செய்து கொள்ளலாம். இந்த அப்டேட்டானது வாட்ஸ்அப் டெஸ்டர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து பயனாளர்களும் பயன்படுத்தும் வகையில் வெளியிட்டப்படும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.

Adengappa Will this kind of facility come in WhatsApp Recently released super update read it now

LATEST POSTS IN VALAIYITHAL.COM