‘ரசிகர்களை கவர கவர்ச்சியைப் பாதை தேர்வு செய்துள்ள, நடிகை தர்ஷா குப்தா’
சினிமா துறைக்கு புதியதாக இருந்தபோதிலும், அனைவரது கவனத்தையும் ஈர்க்கக் கூடிய கவர்ச்சிப் பாதையை தேர்ந்தெடுத்துள்ள நடிகைகளில் ஒருவராக வளம் வருகிறார், நடிகை தர்ஷா குப்தா. சின்னத்திரையில் நடிக்கும் ஏராளமான நடிகைகள் தற்போது வெள்ளித்திரைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
உதாரணமாக ஸ்ரீதிவ்யா, நயன்தாரா, நிவேதா தாமஸ், ஹன்சிகா போன்ற பல புகழ் பெற்ற நடிகைகளும், சின்னத்திரை மூலமாகவே வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர்கள்.
குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், தற்போது முன்னணி கதாநாயகியாக உள்ள பிரியா பவானி சங்கர் இதற்கு முன், செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர். மேலும் மதுமிதா, சைத்ரா ரெட்டி சுஜாதா, வாணி போஜன், அபிதா என பலரும் வெள்ளித்திரையில் கலக்கி வருகின்றனர்.
அந்த வகையில் ‘ருத்ர தாண்டவம்’ படத்தின் மூலம் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர், நடிகை தர்ஷா குப்தா. தற்போது இவர், ‘ஓ மை கோஸ்ட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர், ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.
இது குறித்து நடிகை தர்ஷா குப்தா கூறுகையில், “ரசிகர்களுக்கு பிடித்தவற்றை செய்வதில் எந்த தவறும் கிடையாது. என்னை ரசிகர்கள் விரும்புகிறார்கள். நானும் அவர்களை விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
சினிமாவிற்கு அறிமுகம் ஆகும்போதே கவர்ச்சிப் பாதையை தேர்வு செய்துள்ளார் நடிகை தர்ஷா குப்தா.