நடிகர் விக்ரமிற்கு விலா எலும்பு முறிவு – தங்கலான் படப்பிடிப்பில் ஏற்ப்பட்ட விபத்து

0
18
Cinema News

பொன்னியின் செல்வன் படத்தில ஆதித்த கரிகாலனாக வலம் வந்த சீயான் விக்ரம் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்திலே தயாரித்து வரும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். பா.ரஞ்சித் இயக்கும் இந்த படத்திற்கு முதல் முறையாக ஜி.வி.பிரகாஷ் குமார் இணைந்து இசை அமைத்துள்ளார்.

நடிகர் விக்ரம் இந்த படத்தில் முற்றிலும் வேறுபட்ட தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படத்திர்க்கென தனது உடல் எடையை குறைத்து ரசிகர்களை அசரவைத்துள்ளார். மேலும் இந்த படத்திற்க்கான மேக்கிங் வீடியோ வெளியிட்டுள்ளது. இதனால் இப்படத்தை எப்போது பார்ப்போம் என்ற எண்ணமும், ஆர்வமும் மக்களிடையே அதிகரித்துள்ளது.

இத்திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். கிஷோர் குமார் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தங்கலான் படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் தங்கலான் படப்பிடிப்பின் போது விக்ரமிற்கு விலா எலும்பு முறிவு ஏற்ப்பட்டுவிட்டது. உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் தங்கலான் படத்தில் தொடர்ந்து நடிக்க முடியாது. உடல் நலம் சரியான பிறகு அசத்துவார் என விக்ரமின் மேனேஜர் சூர்ய நாராயணன் அறிவித்துள்ளார்.


RECENT POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here