கங்குவா படத்திற்காக உடல் எடை கூடிய சூர்யா – வைரலாகும் புகைப்படம்

0
14
Ganguwa photo goes viral

சமீபத்தில் சூரரை போற்று, ஜெய் பீம் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்தவர் நடிகர் சூர்யா. இவர் நடித்த சூரரை போற்று படத்தில் தன் லட்சியத்தை அடைய போராடும் ஒரு அட்டகாசமான கதாபாத்திரத்தில் நடித்தார். அதில் அவர் சிறந்த நடிகருக்கான விருதை தட்டி சென்றார். அதுமட்டுமல்ல ஆஸ்கார் தர வரிசை பட்டியல் வரைக்கும் போன ஜெய் பீம் படம் பல பாராட்டுகளை அள்ளி குவித்துள்ளது.

இதனையடுத்து, நடிகர் சூர்யா தனது 42வது படத்தை சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக திஷா பதானி நடித்துள்ளார். மேலும் இந்த படம் 3டி தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்படுகிறது. கங்குவா படம் ஒரு சரித்திரத்தோடு கதையம்சமாக உருவாவதோடு மட்டுமல்லாமல் 10 மொழிகளில் தயாரிக்கப்படுகிறது.

இந்த படத்திற்க்கான படப்பிடிப்பு கொடைக்கானலில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் சூர்யாவின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் சூர்யாவின் உடல் எடை கொஞ்சம் கூடி செம்மையா தாடி மீசையில் இருக்கிறார். மேலும் இப்படத்தில் பல்வேறு தோற்றத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


LATEST POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here