உடல்நலக்குறைவால் நடிகர் சரத் பாபு காலமானார்…. திரையுலகமே சோகத்தில்…

0
10
உடல்நலக்குறைவால் நடிகர் சரத் பாபு காலமானார்

முள்ளும் மலரும், வேலைக்காரன், உதிரிபூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, நெற்றிக்கண், அண்ணாமலை, முத்து போன்ற படங்களில் நடித்த தமிழ் திரையுலக நடிகர் சரத் பாபு. இவர் தமிழ், தெலுங்கு, கண்டம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தவர்.

உடல் நலக் குறைவு காரணமாக நடிகர் சரத் பாபு ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரகம், கல்லீரல் உறுப்புகள் பாதிக்கப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில வாரங்களாக நடிகர் சரத் பாபுவின் உடல்நிலை கவலைக்கிடமாகவே இருந்தது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நடிகர் சரத்பாபு இன்று உயிரிழந்தார்.

மேலும் அவரது மறைவிற்கு திரையுலகமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இவரது இறுதிச் சடங்கானது சென்னையில் உள்ள தி.நகரில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.


LATEST POSTS IN VALAIYITHAL.COM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here