தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்றாலே நம் அனைவருக்கும் நினைவில் வருவது ரஜினிகாந்தை தான். அந்த அளவிற்கு அவரின் ஸ்டைல் மற்றும் நடிப்பு மக்களை கவர்ந்துள்ளது என்றே சொல்லலாம். இவர் திரையுலகிற்கு வருவதற்கு முன்பு வரை ஒரு பஸ்ஸில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். சிவாஜி ராவ் என்பதுதான் இவரின் இயற்பெயராக இருந்தது. அதன்பின் திரையுலகிற்கு வந்து நடிக்க தொடங்கியது இவர் ரஜினிகாந்த் என்று பெயரை மாற்றிக்கொண்டார். சமீபத்தில் கூட இவர் நடித்த “ஜெயிலர்” திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்துள்ளது.

இந்நிலையில், ரஜினிகாந்த் அவர்கள் திடீரென்று தான் பணியாற்றிய பெங்களூருவில் உள்ள ஜெயநகர் பேருந்து டிப்போவுக்கு ஒரு விசிட் வந்தார். அப்பொழுது அந்த டிப்போவில் இருந்த ஊழியர்களை சந்தித்து தான் பணியாற்றிய பழைய நினைவுகளை அவர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
Also Read : வாட்ஸ் அப் யூஸ் பண்ணிட்டு இருக்கீங்களா..? மறந்தும் கூட இந்த தப்ப பண்ணிடாதீங்க! இல்லனா அவ்வளவுதான்!!
அதன்பின், அங்கிருந்த பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இவரின் திடீர் விசிட்டால் பலரும் அதிர்ச்சியடந்ததுடன் சிறிது நேரம் அங்கு பரப்புப்பும் ஏற்பட்டது.