நடிகர் கவின் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில்! படக்குழு அறிவித்த புதிய அப்டேட்…!

Today Cinema News 2023

தனியார் தொலைகாட்சி ஒன்றில் வெளியான கனா காணும் காலங்கள் என்ற தொடரின் மூலமாக பிரபலமானவர் தான் நடிகர் கவின். அதனையடுத்து, சரவணன் மீனாட்சி, தாயுமானவன் போன்ற சீரியல்களில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.மேலும், நட்புன்னா என்னான்னு தெரியுமா, லிப்ட், டாடா போன்ற படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார்.

Today Cinema News 2023

இந்நிலையில், ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படத்தை இயக்கிய எலன் இயக்கத்தில் நடிகர் கவின் நடிக்கிறார். ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மெண்ட் மற்றும் எஸ்விசிசி நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

Also Read>> Happy Teachers Day Tamil Wishes 2023

மேலும், இந்த படத்திற்கான டைட்டிலை படக்குழு வெளியிட்டது. கவின் நடிக்கும் இந்த படத்திற்கு ‘ஸ்டார்’ என்று தலைபிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. வருகிற ஆகஸ்ட் 31-ந்தேதி டைட்டில் புரோமோ நாளை மாலை 6 மணி அளவில் வெளியாகும் என்று படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.