Actor, DMDK chief Vijayakanth dies at 71 : நல்ல திரைப்படக்கலைஞர்… நல்ல அரசியல் தலைவர்… நல்ல மனிதர்… நல்ல சகோதரர்… ஒட்டுமொத்தமாக ஒரு நல்லவரை நாம் இழந்து இருக்கிறோம்! தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல்

Actor, DMDK chief Vijayakanth dies at 71

விஜயகாந்த் அவர்களுக்கு 71 வயதாகிறது. சிறந்த நடிகராகவும், தே.மு.தி.க தலைவருமாக இருந்து வந்தார். சில நாட்களாகவே உடல்நலக்குறைவாக இருந்தார். கடந்த 26 ஆம் தேதி இரவு மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். எப்போதும் போல வழக்கமான பரிசோதனைக்கு தான் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தலைமை அலுவலகம் அறிவித்திருந்தது. தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், மூச்சு விடுவதில் சிரமம் என்றும், இதனால் வெண்டிலேட்டர் மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் தே.மு.தி.க தலைமை அலுவலகம் அறிவித்து இருந்தது. இந்த சூழ்நிலையில், சிகிச்சை பலனிலாமல் தே.மு.தி.க தலைவரான விஜயகாந்த் அவர்கள் இன்று காலமானார்.

விஜயகாந்த் மறைவிற்கு திரை பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள் என அனைவரும் கண்ணீருடன் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஐஐடி மெட்ராஸில் வேலை செய்ய ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்பு! Apply Now!

புதுச்சேரி மாநில துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

“உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர், சகோதரர் கேப்டன் விஜயகாந்த் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் மனவேதனை அடைந்தேன். நல்ல திரைப்படக்கலைஞர்… நல்ல அரசியல் தலைவர்… நல்ல மனிதர்… நல்ல சகோதரர்… ஒட்டுமொத்தமாக ஒரு நல்லவரை நாம் இழந்து இருக்கிறோம்.

சகோதரர் விஜயகாந்த் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்”. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள எங்களுடைய TELEGRAM அல்லது WHATSAPP குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top