இனிமே இதற்கும் ஆதார் எண் கட்டாயம்…! சற்றுமுன் வெளியான புதிய தகவல்!!

இந்தியாவில் ஒரு தனி நபரின் முக்கிய அடையாள அட்டையாக ஆதார் அட்டை பார்க்கப்படுகிறது. மத்திய அரசு பொதுமக்களுக்கு ஆதார் கார்டின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ரேஷன் கார்டுடன் ஆதார் எண் இணைப்பு மற்றும் வங்கி எண் இணைப்பு ஆகியவற்றை மேற்கொண்டு வருகிறது.

Aadhaar number is required for this too New information just released read now

இந்நிலையில், தற்பொழுது பாஸ்போர்ட் சேவைக்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து வேறு ஒரு நாட்டிற்கு செல்ல கண்டிப்பாக பாஸ்போர்ட் என்று அழைக்கப்படும் கடவுச்சீட்டு அவசியம் ஆகும். ஏனெனில் இந்தியாவில் பிறந்த நம்மை பற்றி முழு தகலும் அந்த பாஸ்போர்டில் இடம் பெற்றிருக்கும்.

இதையடுத்து, புதிய பாஸ்போர்ட்டை பெற விண்ணப்பிக்கும் பொழுது விண்ணப்பதாரர்களின் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று ஜம்முவின் பிராந்திய பாஸ்போர்ட் அதிகாரி ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார். மேலும் பாஸ்போர்ட் தொடர்பான சேவைகளுக்கு ஆகஸ்ட் 5 முதல் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.


RECENT POSTS IN JOBSTAMIL.IN