விவசாயிகளுக்கு ஒரு அதிர்ச்சி தகவல்..! இத பண்ணலனா உதவித்தொகை கிடையாதாம்! உடனே பண்ணுங்க!

0
58

தமிழ்நாட்டில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாய குடும்பங்களுக்கு உதவி தொகையாக 4 மாதத்திற்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் , ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் 3 தவணைகளில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடி பணப்பரிமாற்றம் மூலமாக ஒன்றிய அரசினால் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நடப்பாண்டில் 13-வது தவணையாக, 2022 டிசம்பர் முதல் 2023 மார்ச் வரையிலான காலத்திற்கான தவணை தொகை பி.எம். கிசான் இணையதளத்தில் தங்களது ஆதார் எண்ணை உறுதி செய்த பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என ஒன்றிய அரசு உறுதியாக தெரிவித்துள்ளது. எனவே பயனாளிகள் பொது சேவை மையம் மூலமாகவோ அல்லது தங்களின் கைபேசி மூலமாகவோ தாங்களாகவே ஆதார் எண்ணை உறுதி செய்து கொளளலாம்.

1. முதலில், பிஎம் கிசான் அதிகார்வபூர்வ இணையதளமான https://pmkisasn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லவும். அதில், ஆதார் என்ற இணைப்பை கிளிக் செய்யவும். அதில் உங்கள் ஆதார் எண்ணை குறிப்பிடவும் அதன்பின் ஆதார் என்னுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP எண் வரும்.

2. அதன்பின், OTP எண்ணை உள்ளிட்டு அதன்பிறகு ok பட்டனை கிளிக் செய்யவும்.

3. இதனை பொது சேவை மையத்தில் செய்யும்பொழுது உங்கள் ஆதார் எண்ணை உறுதிபடுத்திகொள்ள பொது சேவை மையத்தில் உள்ள கருவியில் பயனாளிகள் தங்கள் விரல் ரேகையை வைத்து பிஎம் கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்யலாம்.

பி.எம் கிசான் தவணை தொகை பெறும் பயனாளிகள் இதுநாள் வரை ஆதார் எண்ணை இணைக்காமல் இருந்தால் மேற்காணும் முறைகளில் பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை இணைத்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RECENT POSTS-ன் வலையிதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here