மக்களுக்கு இடிமேல் இடி… தக்காளி விலையை தொடர்ந்து அரிசியின் விலையும் அதிரடி உயர்வு..! இதுதான் காரணமா?

உலக அளவில் அரிசி ஏற்றுமதியில் இந்தியா முன்னிலை வகுத்து வருகிறது. இந்நிலையில், மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன் அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்தது. இதன் காரணமாக வெளிநாடுகளில் அரிசியின் விலை பல மடங்கு உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அமேரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் அரிசி கடைகளில் அரிசியை வாங்க முண்டியடித்து வருகின்றனர்.

உலக அளவில் அரிசி தட்டுப்பாடு காரணமாக மத்திய அரசு பாசுமதி அரிசியை தவிர்த்த பிற வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளதால் உலக நாடுகளில் அரிசியின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது.

இந்தியாவில் இதுகுறித்து அரிசி உற்பத்தியாளர்கள் கூறுகையில், இந்தியாவில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்றும் மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் அரிசி ஆலை உற்பத்தியாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், அரிசியின் வரத்து குறைந்துள்ள காரணத்தினால் அரிசியின் விலை ரூ.10 வரை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

A shock to the people Following the price of tomato the price of rice has also increased drastically Is this the reason watch now

LATEST POSTS IN VALAIYITHAL.COM