பள்ளி மாணவர்களுக்கு ஒரு ஷாக் நியூஸ்…! சனிக்கிழமையும் ஸ்கூல் இருக்கு-முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு

0
49

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடர்மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் சென்னையில் வரும் சனிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதன்காரணமாக சென்னையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் அந்த அறிவிப்பின் போதே அந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் சனிக்கிழமைகளில் வேலை நாட்களாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனை தொடர்ந்து, இந்த விடுமுறை நாட்களை ஈடு செய்யும் வகையில் வரும் சனிக்கிழமை (03.12.2022) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் மழை காரணமாக சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வந்த அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அந்தபணி நாட்களை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமை சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் திங்கள்கிழமை பாட வேளையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதி செயல்படும் என்று முதன்மை கல்வி அலுவலர் கூறியுள்ளார்.

RECENT POSTS-ன் வலையிதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here