தொடர்ந்து 12 நாட்களாக வட்டமாக நடந்த செம்மறி ஆடுகள்..! அச்சத்தில் செம்மறி ஆட்டின் ஓனர்! வைரல் வீடியோ

0
51

சீனாவில் மியோ என்பவர் செம்மறி ஆட்டு கூட்டங்களை வளர்த்து வருகிறார். பொதுவாக செம்மறி ஆடு மற்ற விலங்குகளை போல் அல்லாமல் தனித்தன்மை வாய்ந்தவை. உதரணாமாக முதலாவதாக ஒரு ஆடு என்ன செய்கிறதோ, அதையே தான் மற்ற அனைத்து ஆடுகளும் செய்யும்.

அதேபோல், மியோ என்பவர் வளர்த்த வந்த செம்மறி ஆடுகளும் அதேபோல்தான் ஒரு செயலை செய்ததது. இது குறித்த வீடியோ ஒன்று வெளியாகி பரப்பரப்பை ஏர்படுத்தியுள்ளது. மியோ என்பவர் மொத்தம் 34 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். இதில் திடீரென்று 13 ஆடுகள் ஒரு வட்டமாக சுற்றி, சுற்றி நடக்க தொடங்கின. ஏன் இப்படி வட்டம் போடுகிறது? என்ன செய்ய முயற்சிக்கிறது என எதுவும் புரியவில்லை. ஆனால் 12 நாட்களாக இது தொடர்ந்துள்ளது. இடையிடையே உணவு உண்ணவும், தண்ணீர் அருந்தவும், தூங்கவும் ஆடுகள் இடைவெளி விட்டதா, இல்லையா என்பது தெளிவாக தெரியவில்லை.

இது குறித்து பாலரும் பலவித கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில், ஒருவர் ஒருவேளை ஆடுகளுக்கு ஏதேனும் நோய் இருந்து, அதன் காரணமாக வட்ட நடை போட்டிருக்கலாம் என்று சொன்னால், அதன் உரிமையாளர் இந்த தகவலை திட்டவட்டமாக மறுக்கிறார். அனைத்து ஆடுகளுமே ஆரோக்கியமாகத்தான் இருக்கின்றன என்று அவர் கூறுகிறார். ஒரு சிலர் இந்த வீடியோவை பார்த்து கேலி கிண்டல் செய்து வருகிறனர். சிலர் செம்மறி ஆடுகள் இப்படி வட்டமிடுவதால் ஏதாவது மர்மமான காரணம் இருக்குமோ என்று ஊடகங்களில் தெரிவித்து வருகிறனர். இதற்கான உண்மை காரணங்கள் குறித்து எ எந்த தகவலும் வெளிவரவில்லை.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here