மின்வாரியம் வெளியிட்ட புதிய லிங்க்! இனி ஈஸியா மின் இணைப்புடன் ஆதாரை இணைச்சிக்கலாம்! உடனே பண்ணுங்க..!

0
47

தமிழக அரசு மின்சார எண்ணுடன் ஆதாரை இணைக்க பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதற்காக பயனர்கள் எளிதில் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்கும் வசதியை ஆன்லைனில் செய்துள்ளது. இதற்கான இணைய தளத்தையும் அரசு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், ஒன்றிற்கு மேற்பட்ட கணக்குகளுக்கு மேல் மின் இணைப்பு வைத்திருக்கும் பயனர்கள், ஒரே ஆதார் எண்ணை ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்பு எண்களுடன் இணைப்பதில் எந்த சிக்கலும் இல்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் வருகிற டிசம்பர் 31-ஆம் தேதி வரை அளிக்கப்பட்டுள்ளது. இதை அறிவித்த ஒரு வாரத்தில் சுமார் 50 லட்சம் பயனாளர்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

இதையடுத்து, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு இணையதளம் மூலம் இணைப்பதற்கும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இணையதளம் மூலம் இணைக்க பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்தும் இணையதளத்திற்கு சென்று அதில் ஆதார் எண்ணை குறிப்பிட்டு இணைத்து கொள்ளலாம். இந்த இணையதள வசதி சரியாக வேலை செய்யாததால் இந்த இணையதளம் பற்றி பலரும் பல்வேறு புகார்களை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், தற்பொழுது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு இணையதளம் புதிதாக அப்டேட் செய்து வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி Bit.ly/linkyouraadhar என்ற இணையதளத்தில் ஆதாரை இணைக்கலாம் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.

RECENT POSTS-ன் வலையிதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here